Anchor Angeline: யூடியூப்பில் மாஸ் காட்டி வரும் தொகுப்பாளினி ஏஞ்சலின்... யார் தெரியுமா?

சென்னை: நடிகர், நடிகைகளை தாண்டி தற்போது சோஷியல் மீடியாவில் வரும் தொகுப்பாளினிகள் விரைவில் மக்களின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் குறுகிய காலத்திலேயே ரசிகர் மனதில் இடம் பிடித்த தொகுப்பாளினி ஏஞ்சலின் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

2002ம் ஆண்டு பிறந்தவர் தான் தொகுப்பாளினி ஏஞ்சலின். 22 வயதான இவர், அப்போது சோஷியல் மீடியாவில் நமக்கு நன்கு அறிமுகமான நடிகர்களை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு வருகிறார். டீன்ஸ் படம் வெளியான போது, இவர், நடிகர் பார்த்திபனை பேட்டி எடுத்து இருந்தார். பார்த்திபனே வார்த்தையால் ஜாலம் செய்து பேசுபவர், அவர் ரசிக்கும்படி கேள்வி கேட்டு இருந்தார் ஏஞ்சலின். அந்த நேர்காணலில் பார்த்திபன் பேசிய விஷயம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

suntv interview

தொகுப்பாளினி ஏஞ்சலின்: ஜெர்னலிசம் படித்துள்ள நடிகை ஏஞ்சலினுக்கு சிறுவயதில் இருந்தே ஜெர்னலிசம் மீது ஆர்வம் இருந்ததால், அதற்காக படித்தார். படித்துக்கொண்டு இருக்கும் போது இவர் இன்டன்ஷிப்பிற்காக சன் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளார். அப்போது, சன் மியூசிக்கில் தொகுப்பாளினிக்கான இன்டர்வியூ நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட இவர் அதில் தேர்வாகி, நச்சுனு நாலு சினிமா செய்திகளை தொகுத்து வழங்கினார்.

suntv interview

தனி ரசிகர் கூட்டம்: இதைத்தொடர்ந்து, சன் டிவியில் வணக்கம் தமிழா, ரஞ்சிதமே மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார். அதன் பின் விஜய் டிவிக்கு தாவியா ஏஞ்சலின் அங்கு ரியோவுடன் இணைந்து ஜோடி ஆர்யூ ரெடி என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி பிறகு மேலும் பிரபலமான ஏஞ்சலினுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. இவர் தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் நன்றாக பாடக்கூடியவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் ஒரு பாட்டும் பாடி இருக்கிறார்.

suntv interview

மிகப்பெரிய வளர்ச்சி: தொகுப்பாளினி ஏஞ்சலின் விஜய்சேதுபதி,உதயநிதி, பார்த்திபன், விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், ஹிப்பாப் ஆதி, நாகசைத்தன்யா, விஷால் என பல நடிகர்களை சிறப்பு பேட்டி எடுத்தது மட்டுமில்லாமல், இசைவெளியீட்டு விழா, திரைப்பட சக்சஸ் மீட் என பலவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். ஏஞ்சலின் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இரண்டு வருடத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்

suntv interview

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X