அப்படீன்னா.. இனிமே சுதாவை நாம பார்க்க முடியாதா.. கவலையில் "அழகு" ரசிகர்கள்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியலை ட்ராப் செய்து விட்டதாக அந்த சீரியலின் நாயகி ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சன் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அழகு. தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் நடிகை ரேவதி அழகம்மை என்ற கதாபாத்திரத்திலும், தலைவாசல் விஜய், பழனிசாமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

முக்கிய பாத்திரங்கள்
இவர்களுடன் காயத்ரி ஜெயராம், ஸ்ருதி ராஜ், விஜே சங்கீதா, மணிகண்டன் ராஜேஷ், லோகேஷ் பாஸ்கரன், அவினாஷ் அசோக், பூவிலங்கு மோகன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

லாக்டவுன் காரணமாக
700 எபிசோடுகளுக்கு மேல் கடந்திருக்கும் இத்தொடரை தற்போது ராமச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். சுவாரசியமாக சென்று கொண்டிருந்த இந்த சீரியல் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு நிறுத்தம்
இந்நிலையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து புதிய எபிசோட்கள் படமாக்கப்பட்டன. இதையடுத்து ஜூன் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஜூலை 5 ஆம் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்து.

நடிகர் அவினாஷ்
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் கடந்த 8ஆம் தேதி முதல் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அழகு சீரியலில் நடிக்கும் திருநா, அழகு சீரியலில் தன்னுடைய பயணம் முடிவடைவதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

ஸ்ருதி ராஜ் வீடியோ
இதனை தொடர்ந்து பலரும் அழகு சீரியல் முடியப் போகிறதா என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அந்த சீரியலின் நாயகியான ஸ்ருதிராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அழகு சீரியல் முடிந்து விட்டதா என பலரும் என்னிடம் கேட்கிறீர்கள். கடந்த மாதம் என்னை அழகு சீரியல் ஷூட்டிங்கிற்கு அழைத்தார்கள்.

பங்கேற்க முடியவில்லை
எனக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால், இந்த நேரத்தில் என்னால் வரமுடியாது என அழகு சீரியல் டீமுக்கும் சேனலுக்கும் தெரிவித்தேன். அதன்பிறகு இந்த மாதம் 8 ஆம் தேதி மீண்டும் ஷுட்டிங் இருக்கும் என்பதை போலதான் எல்லோரும் பேசினார்கள்.

ஷாக்காக உள்ளது
ஆனால் யாருக்கும் தெரியவில்லை. டக்குன்னு சீரியல் டிராப் செய்வதாக தெரிவித்துள்ளார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. எனக்கும் இது ஷாக்காகதான் உள்ளது. அழகு சுதாவை சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து உங்களின் ஆதரவையும் அன்பையும் கொடுங்கள்.. இவ்வாறு நடிகை ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார்.

மிஸ் பண்ணுவோம்
ஸ்ருதி ராஜின் இந்த வீடியோவை பார்த்த பலரும் மிஸ் யு என பதிவிட்டுள்ளனர். உண்மையிலேயே அழகு சீரியலை ரொம்பவே மிஸ் செய்வோம் என்றும் உங்களை விரைவில் மீண்டும் ஒரு சீரியலில் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











