மாவீரன் சாட்டிலைட் ரைட்ஸ்... பல கோடிகள் கொடுத்து தட்டித் தூக்கிய சேனல்... சிவகார்த்திகேயன் ஹேப்பி!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் ஷூட்டிங் வேகவேகமாக நடைபெற்று வருகிறது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் குறித்து படக்குழு அபிஸியலாக அப்டேட் கொடுத்துள்ளது.

 சிவகார்த்திகேயனின் மாவீரன்

சிவகார்த்திகேயனின் மாவீரன்

சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் கொடுத்த எனர்ஜியை, அடுத்தடுத்து வெளியான டான், பிரின்ஸ் படங்கள் காலி செய்துவிட்டன. ஆனாலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியான மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள், இந்தப் படத்தின் ஹைப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடிய இந்தப் பாடல் ரசிகர்களின் வைபை தெறிக்கவிட்டது.

 சாட்டிலைட் ரைட்ஸ்

சாட்டிலைட் ரைட்ஸ்

சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா நடித்து வரும் மாவீரன் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை வென்ற மடோன் அஸ்வின், மாவீரனில் என்ன மேஜிக் செய்திருப்பார் என எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி வாங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 பல கோடிகளில் பிஸினஸ்

பல கோடிகளில் பிஸினஸ்

மாவீரன் படத்தை தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் இதனை தனது டிவிட்டரில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. மாவீரன் சாட்டிலைட் ரைட்ஸ்காக பல முன்னணி சேனல்கள் போட்டிப் போட்டு வந்த நிலையில், சன் டிவி பல கோடிகளை கொடுத்து தட்டித் தூக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸும், தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் நிறுவனமும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ப்ரீ ரிலீஸ் பிஸினஸ்

ப்ரீ ரிலீஸ் பிஸினஸ்

மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே தகராறு என சொல்லப்பட்டு வந்தன. ஆனால், தற்போது நடக்கும் ப்ரீ ரிலீஸ் பிஸினஸை பார்த்தால், மாவீரன் தரமான ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படம் ரம்ஜான் அல்லது பக்ரீத் ஸ்பெஷலாக ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X