விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ’தளபதி 64’ சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குனது யார் தெரியுமா?
Recommended Video
சென்னை: சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தனியார் டிவி சேனலான சன் டிவி பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான சர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தின் சேட்டிலைட் உரிமத்தையும் சன் டிவி தான் வாங்கியுள்ளது.
பாதி ஷூட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையில், 'தளபதி 64' படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சன் டிவி
விஜய்யின் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. சர்கார் படத்தின் டிவி பிரீமியரும் சன் டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது. இதனால், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படத்தின் சேட்டிலைட் உரிமத்தையும் சன் டிவி வாங்கியுள்ளது. தற்போது, ‘தளபதி 64' படத்தின் சேட்டிலைட் உரிமத்தையும் கடும் போட்டிக்கு இடையே சன் டிவி பெற்றுள்ளது.
டெல்லி ஷூட் ஓவர்
டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வந்த 'தளபதி 64' ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத் மற்றும் தினேஷ் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், டெல்லி ஷெட்யூலை நண்பர்களுடன் முடித்தது ஹேப்பி என பதிவிட்டுள்ளார்.

ஷிவமோகா
விஜய், விஜய்சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் அடுத்த கட்ட ஷூட்டிங் கர்நாடகாவில் உள்ள ஷிவமோகாவில் நாளை டிசம்பர் 1 முதல் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து 50 நாட்கள் ஷிவமோகாவில் விஜய், விஜய்சேதுபதி மோதும் சண்டை காட்சிகள் உள்ளிட்ட படத்தின் முக்கியமான காட்சிகள் அங்கு தான் படமாக்கப்பட உள்ளதாம்.

பொங்கலுக்கு பிகில்
தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் திரைப்படம் குடியரசு தின சிறப்புத் திரைப்படமாக இந்த ஆண்டு சன் டிவியில் போடப்பட்டது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ள பிகில் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பெற்றுள்ள சன் டிவி, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிகில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாம்.

எத்தனை கோடி
பிகில் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை 50 கோடிக்கு வாங்கிய சன் டிவி, ‘தளபதி 64' சேட்டிலைட் உரிமத்தை வெறும் 35 கோடிக்கு தான் வாங்கியுள்ளதாம். ஆனால், பிகில் படத்தின் பட்ஜெட்டுக்கும் ‘தளபதி 64' படத்தின் பட்ஜெட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால், இந்த தொகை ‘தளபதி 64' படத்துக்கு அதிகம் தான் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சன் டிவி இன்னும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











