விஷாலின் பூஜை படத்தை கைப்பற்றிய சன் டிவி
விஷால் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள பூஜை படத்தில் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கம் 2 படத்திற்குப் பின்னர் விஷால்-சுருதிஹாசனை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் ‘பூஜை'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஷால் தயாரிப்பில்
பூஜை படத்தை தன்னுடைய சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார் விஷால்.

தீபாவளி ரிலீஸ்
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சத்யராஜ். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாடல்கள் ரிலீஸ்
பூஜை படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு வெளிவரும் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

சன் டிவி
இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. கணிசமான ஒரு தொகைக்கு இந்த உரிமையை சன் டிவி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

முந்திக்கொண்ட சன்
விஷால் நடித்த பாண்டியநாடு படத்தை ராஜ்டிவி வாங்கியது. நான் சிகப்பு மனிதன் படத்தை விஜய் டிவி கைப்பற்றியது. எனவே விஷால் படத்திற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து பூஜை படத்திற்கு முந்திக்கொண்டு பூஜை போட்டுவிட்டது சன் டிவி.


Click it and Unblock the Notifications











