'தளபதி 63' சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய சன் டிவி
Recommended Video

சென்னை: விஜய்யின் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இது குறித்து அட்லி இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வில்லு படத்தை அடுத்து விஜய், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. விஜய் படங்களின் கதை அல்லது காட்சிகள், புகைப்படங்கள் கசிவது வழக்கமாக உள்ளது.
இம்முறை எதுவும் கசிந்துவிடாமல் இருக்க ஜாக்கிரதையாக உள்ளார் அட்லி. தளபதி 63 படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்த தீபாவளி தளபதி தீபாவளி என்று விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











