இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!

சென்னை: இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்கிற சத்தத்துடன் சன் டிவியில் தளபதி 67 படத்தை ஒளிபரப்ப அதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.

இந்நிலையில், படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது.

அப்டேட் வேணுமா அப்டேட் இருக்கு

அப்டேட் வேணுமா அப்டேட் இருக்கு

விஜய்யின் வாரிசு படம் 280 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தளபதி 67 படத்தின் அடுக்கடுக்கான அப்டேட்களை அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தில் ராஜு மோடில் அப்டேட் வேணுமா அப்டேட் இருக்கு என கடந்த 30ம் தேதி முதல் நாளை வரை வரிசையாக வெளியிட்டு விஜய் ரசிகர்களை செம ஹாப்பி ஆக்க உள்ளது. ஆனாலும், அதன் பிறகு கூட ரசிகர்கள் புதிய அப்டேட் கேட்டு நச்சரிக்கத்தான் போகின்றனர்.

காஸ்ட் அப்டேட்

காஸ்ட் அப்டேட்

தளபதி 67 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க என தகவல்கள் கசிந்த நிலையில், அதிரடியாக ஒட்டுமொத்த காஸ்ட் அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டது. விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்றும் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார் என்றும் மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர்கள் நடிக்கும் அறிவிப்பு வெளியானது. மேலும், சில நடிகர்கள் பற்றிய அறிவிப்பை இன்னமும் ரகசியமாக வைத்துள்ளனர்.

சாட்டிலைட் உரிமம்

சாட்டிலைட் உரிமம்

இந்நிலையில், இன்றைய ஹாட் அப்டேட்டாக தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பையே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்திய தொலைக்காட்சிகளில்

இந்திய தொலைக்காட்சிகளில்

இந்த ஆண்டு தீபாவளிக்கு திட்டமிட்டப்படி தளபதி 67 திரைப்படம் வெளியானால், அடுத்த பொங்கலுக்கு இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தளபதி 67 படத்தை சன் டிவி வெளியிட்டு விடும் என்கிற அளவுக்கு ரசிகர்கள் கெஸ் பண்ணி விட்டனர். வாரிசு, மாஸ்டர், சர்கார், பிகில், பைரவா என பல ஆண்டுகளாகவே விஜய் படங்களை சன் டிவி மட்டுமே வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சன் நெக்ஸ்ட் ஓடிடியில்

சன் நெக்ஸ்ட் ஓடிடியில்

சன் டிவி சாட்டிலைட் உரிமத்தை பெரும் தொகைக்கு கொடுத்து வாங்கி உள்ள நிலையில், தளபதி 67 திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி விடும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். வாரிசு படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் வாங்கி உள்ள நிலையில், தளபதி 67 ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் அல்லது சன் நெக்ஸ்ட் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரோ அப்டேட்டுக்கு வெயிட்டிங்

ப்ரோ அப்டேட்டுக்கு வெயிட்டிங்

சாட்டிலைட் உரிமம் குறித்த அப்டேட் இன்று மதியம் வெளியான நிலையில், மாலை ஒரு தரமான அப்டேட் காத்திருக்கு என்றும் அடுத்து நாளை வெளியாக உள்ள தளபதி 67 ப்ரோமோ அப்டேட்டை தான் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆரம்பிக்கலாங்களா என விக்ரம் ப்ரோமோ வந்ததை போல ஸ்டார்ட் பண்ணலாமா நண்பா என தளபதி 67 ப்ரோமோ வரும் என அனைவரும் ஆவலாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X