5வது முறை.. டாக்டர் படத்தை கைப்பற்றிய சன் டிவி.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம்ம ஹாப்பி!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து 5வது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

#DoctorWithSunTV என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, படிப்படியாக விஜய் டிவியின் பிரபல காம்பேராக உயர்ந்த சிவகார்த்திகேயன், அங்கேயே தேங்கி விடாமல், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

ஜீரோவான ஹீரோ

ஜீரோவான ஹீரோ

பி.எஸ், மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் திரைக்கு வந்த ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை. படத்தில் நல்ல கதை இருந்தாலும், லாஜிக் இல்லை என பலரும் விமர்சித்து ஹீரோவை ஜீரோ ஆக்கினர்.

டாக்டர்

டாக்டர்

ஆனாலும், தனது நம்பிக்கையை கைவிடாது தனது அடுத்த படமான டாக்டர் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்து வருகிறது.

சன் டிவி

சன் டிவி

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி நல்ல தொகைக்கு கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.

5வது முறை

5வது முறை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ மற்றும் தற்போது டாக்டர் என தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 5 படங்களின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை ரசிகர்கள் #DoctorWithSunTV என்ற ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தலைவர் 168

தலைவர் 168

மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடிப்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இதுவரை அந்த நடிகர் யார் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட வில்லை. சமீபத்தில் தலைவர் 168 படத்தில் நயன்தாரா இணைந்த அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X