twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு விஜய் டிவி செய்த அதே காரியத்தை விஜய்க்கு செய்த சன் டிவி.. ஏமாந்து போன ஃபேன்ஸ்!

    |

    சென்னை: ரஜினிக்கு விஜய் டிவி செய்த அதே வேலையை நடிகர் விஜய்க்கு சன் டிவியும் செய்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    Recommended Video

    மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், யாரும் எதிர்பாராத நேரத்தில் டான்ஸ் ஆடி அசத்திய விஜய் - வீடியோ

    மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் படத்தில் நடித்த பிரபலங்களும் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் ரசிகர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சன் டிவியில்..

    சன் டிவியில்..

    பிகில் விழாவின் போது விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் இம்முறை ரசிகர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இசை வெளியீட்டு விழா நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. சன்டிவியில் மாலை 6.30 மணிக்கு, வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பப்படும் படத்திற்கு பதிலாக ஒளிப்பரப்பப்பட்டது.

    அசத்திய விஜய்

    அசத்திய விஜய்

    விழாவில் பங்கேற்ற படத்தின் ஹீரோவான விஜய், நிகழ்ச்சியின் இறுதியாக மேடைக்கு வந்தார். அப்போது டான்ஸுடன் தொடங்கிய அவர், பின்னர் பாட்டுப் பாடியும் அசத்தினார்.
    இதனால் ரசிகர்கள் செம ஜாலி மூடுக்கு சென்றனர். தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசினார்.

    விஜய் பேச்சு எடிட்

    விஜய் பேச்சு எடிட்

    மேலும் படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் மற்றும் தன்னுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள முன்னணி நடிகர் விஜய் சேதுபதி குறித்தும் சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். விஜய் பேசியது எல்லாமே எடிட் செய்யப்பட்டுதான் ஒளிபரப்பப்பட்டது.

    குட்டி ஸ்டோரி

    குட்டி ஸ்டோரி

    தொடர்ந்து பேசிய விஜய், குட்டி ஸ்டோரி என தனது படத்தில் இடம்பெற்ற நதி போலே ஓடிக்கொண்டிரு.. என்ற பாடலை பாடி, வாழ்க்கை நதி மாதிரி சிலர் நம்மை வணங்குவாங்க, சிலர் வரவேற்பாங்க, நம்மை பிடிக்காத சிலர் கல் எரிவாங்க. ஆனா கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும். நம்மை எதிர்ப்பவர்களை சிரிப்போடு எதிர்கொள்ள வேண்டும். அவர்களை நம் சிரிப்பால் சாகடிக்க வேண்டும்.

    பரவிய தகவல்

    பரவிய தகவல்

    நாட்டில் மக்களுக்கு தேவையானதைத்தான் சட்டமாக உருவாக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது என்று விஜய் பேசியதாக தகவல் பரவியது. விஜயின் இந்த பேச்சு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சமூக வலைதளங்களில் வைரலானது. சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. விஜய் தைரியமாக பேசிவிட்டார் என மார் தட்டினர் ரசிகர்கள்.

    கடுப்பான ஃபேன்ஸ்

    கடுப்பான ஃபேன்ஸ்

    ஆனால் இரவு 9.30 மணிக்கு மேல் விஜய் பேச்சை லைவ் என ஒளிபரப்பிய சன் டிவி சட்டம் குறித்து அவர் பேசியதையெல்லாம் கத்தரி போட்டு விட்டது. சமூக வலைதளங்களில் வந்ததை டிவியில் முழுவதுமாக பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். லைவ் என இரண்டு மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பியதற்கு காரணம், இந்த எடிட்டிங் வேலைக்காகத்தான என கேட்டு திட்டி தீர்த்தனர்.

    ரஜினியின் பேச்சு

    ரஜினியின் பேச்சு

    கமல் 60ஐ முன்னிட்டு நேரு உள் விளையாட்டரங்கில் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜினிகாந்த், முதல்வராவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார், ஆனால் அந்த அதிசயம் நடந்தது. அதேபோல் 2021ல் அதிசயம் அற்புதம் நிகழும் என்று கூறியிருந்தார்.

    அதே வேலை..

    அதே வேலை..

    அந்த பேச்சு சமூக வலைதளங்களில் லைவ்வாக ஒளிபரப்பானது.
    ஆனால் விஜய் டிவியில் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது போது முற்றிலும் எடிட் செய்யப்பட்டு ரஜினிகாந்தின் அரசியல் பேச்சே இல்லாமல் இருந்தது. எதற்கு பிரச்சனை என்று விஜய் டிவி ரஜினிக்கு செய்த அதே வேலையை சன் டிவி தற்போது நடிகர் விஜய்க்கும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sun TV edited Vijay's speech in Master Audio launch function. Vijai TV did this same for Rajini in Kamal's ungal naan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X