குடிகாரன் கிட்ட தனியா மாட்டிக்கிட்டேன்.. பின்னாடியே வந்து ரேட் கேட்டான்.. காயத்ரி பேட்டி!
சென்னை: குடிகாரனிடம் தனியாக மாட்டிய மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை காயத்ரி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.

நடிகை காயத்ரி: தனித்துவமான கதையோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியல் சமீபத்தில் இணைந்தவர் தான் விஜே காயத்ரி. இவர் இந்த சீரியலில் குணசேகரனின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்துள்ள கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியல்: சீரியல் மூலம் பிரபலமான காயத்ரி, அயலி என்ற வெப் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மொத்த கிராமே மூடநம்பிக்கையில் மூழ்கி இருக்கும் போது அதை உடைத்துவிட்டு மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடும் பெண்ணை மையமாக வைத்து அயலி என்கிற வெப் தொடர் உருவாக்கப்பட்டது. 8 எபிசோடுகள் கொண்ட இந்த சீரியல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.
அயலி வெப் தொடர்: இதில் முக்கியமான ரோலில் நடித்திருந்த காயத்ரி, குடும்ப கௌரவத்தை ஏன்டா பெண்களின் காலுக்கு அடியில் தேடுறீங்க என்று அழுத்தமான வசனத்தை பேசி கைத்தட்டலை பெற்றார். அயலி தொடரில் வருவது போல போல்டான பெண்ணான காயத்ரி அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
மோசமான அனுபவம்: அதில், கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக வெளியூர் சென்றிருந்தேன் அப்போது, குடி போதையில் ஒருவர் என்னை பின் தொடர்ந்து ஓட்டல் ரூம் வரைக்கும் வந்து, ரேட் என்ன சொல்லு என்றார். நான் கல்லூரி மாணவி என்று சொல்லியும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் சத்தம் போட்டு கத்தினேன். பின் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அந்த குடிகாரரை மிரட்டி அனுப்பினார்கள். இந்த மோசமான அனுபவத்தை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications