என்னது அண்ணாத்த பிளாக்பஸ்டரா? இத்தனை கோடி வசூல் வேற வந்திருக்காம்.. பரபரக்கும் ரிப்போர்ட்!

சென்னை: இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் பிளாக்பஸ்டர் என்றும் மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் பெற்றுள்ளதாகவும் சன் டிவியின் ரிப்போர்ட் உடன் மனோபாலா விஜயன் போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அண்ணாத்த திரைப்படம் ஆவரேஜ் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இப்படியொரு ட்வீட் போட அது #Annaatthe ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த ட்வீட்டை டிரெண்ட் செய்து, எப்போதும் பாக்ஸ் ஆபிஸ் கிங் ரஜினிகாந்த் தான் என தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அண்ணாத்த வசூல்

அண்ணாத்த வசூல்

சன் டிவி நெட்வொர்க் தங்களது காலாண்டு அறிக்கையில் அண்ணாத்த திரைப்படம் 150 கோடி Nett (177 கோடி Gross) அதுவும் domestic marketல் வந்துள்ளதாக குறிப்பிட்டு இருப்பதை டிராக்கர் மனோபாலா விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு அண்ணாத்த பிளாக்பஸ்டர் திரைப்படம் எனக் கூறியுள்ளார். சர்வதேச அளவில் படத்தின் வசூல் இன்னும் அதிகமாக இருக்குமே என ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிரெண்டிங்கில் அண்ணாத்த

டிரெண்டிங்கில் அண்ணாத்த

இந்த ட்வீட்டை அவர் போட்ட உடனே அண்ணாத்த திரைப்படம் டிசாஸ்டர் இல்லை பிளாக்பஸ்டர் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். மேலும், விஜய் ரசிகர்களை ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்யத் தொடங்கி உள்ளனர். ஆதாரத்துடன் மனோபாலா போட்டிருக்கார் பாருங்க என ரஜினி ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர்.

ரஜினிகாந்த் ஸ்டார்டம்

ரஜினிகாந்த் ஸ்டார்டம்

படம் நல்லா இருக்கோ இல்லையோ நடிகர் ரஜினிகந்தின் ஸ்டார்டம் போதும், அந்த படம் ஹிட் அடிக்க என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளா ரஜினிகாந்த் என ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு ட்விட்டரை ரஜினி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வருமானம் உயர காரணம்

வருமானம் உயர காரணம்

ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தான் இந்த காலாண்டில் அதுவும் கொரோனா பரவல் சமயத்தில் 11 சதவீத வருமானத்தை பெற்றுத் தந்துள்ளதாக சன் டிவி கூறியுள்ள ரிப்போர்ட்களை ரஜினிகாந்த் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். மேலும், விஜய்யின் பீஸ்ட் படம் ஏற்படுத்திய நஷ்டத்தை தலைவர் 169 தான் ஈடு செய்யும் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதே சன் டிவி தான்

அதே சன் டிவி தான்

அதே சன் பிக்சர்ஸ் தான் பீஸ்ட் திரைபப்டம் பிளாக்பஸ்டர் ஹிட் என அதிகாரப்பூர்வமாக போட்டு வருகின்றனர். அடுத்து சன் டிவியின் அரையாண்டு ரிப்போர்ட்டில் பீஸ்ட் படத்தின் ரிப்போர்ட்டும் வரும் எடுத்து போடுங்க மனோபாலா என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெறப்போவது எப்போது? என்கிற கேள்வியை நியூட்ரல் ஃபேன்ஸ் முன் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X