லவ் பண்ணுவீங்களா... பூஜா கேள்வியால் அதிர்ச்சியாகும் விஜய்... பீஸ்ட்டின் அடுத்தத்தடுத்த ப்ரமோக்கள்!
சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள நிலையில், சூப்பர் பிரமோஷன்களுடன் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது சன் பிக்சர்ஸ். அதன் நெட்வொர்க் சேனல்களில் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

நாளை ரிலீசாகும் பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்து நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது பீஸ்ட். படத்தில் முதல்முறையாக செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். அவர் இடம்பெற்ற காட்சிகள் ட்ரெயிலரில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

களைகட்டும் டிக்கெட் புக்கிங்
இதேபோல படத்தில் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டவர்களின் காட்சிகளும் ரசிகர்களிடையே தாறு மாறாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாகவுள்ள அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் புக்கிங் களைகட்டியுள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் படத்தை பார்க்க தயாராகியுள்ளனர்.

நடுக்கடலில் பேனர்
முன்னதாக விஜய்யின் கட்அவுட்கள் உள்ளிட்டவற்றை திரையரங்குகளில் வைத்து அதன்மூலம் விஜய் மீதான தங்களது அன்பை ரசிகர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். புதுச்சேரியில் நடுக்கடலில் பேனர் வைத்த சம்பவமும் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இவை மற்றவர்களுக்கு அபத்தமாக தோன்றினாலும், ரசிகர்களின் அன்பையே வெளிப்படுத்தி வருகின்றன.

சிறப்பான பிரமோஷன்கள்
ரசிகர்கள் ஒருபக்கம் பேனர்களை வைத்து படத்திற்கான பிரமோஷன்களை மேற்கொண்டு வரும் நிலையில், சன் பிக்சர்சும் படத்தை தொடர்ந்து சிறப்பான பிரமோஷன்களால் சிறப்பாக உலகளவில் ரீச் செய்து வருகிறது. படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் மற்றும் தீம் பாடல் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு ரசகிர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து ட்ரெண்டிங்
இவை அனைத்தும் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளன. மேலும் யூடியூபிலும் கோடிக்கணக்கில் வியூசை அள்ளியுள்ளன. லைக்சும் தெறிக்கவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது படம் நாளைய தினம் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த ப்ரமோக்களை சன் பிக்சர்ஸ் தனது நெட்வொர்க் சேனல்களில் வெளியிட்டு வருகிறது.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ப்ரமோக்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது. இன்றைய தினம் படத்தின் 5வது ப்ரமோவை வெளியிட்டுள்ளது. இதில் லவ் பண்ணுவீங்களா என்று பூஜா கேட்கிறார். அதற்கு அதிர்ச்சியுடன் விஜய் பார்க்கிறார். தொடர்ந்து விடிவி கணேஷ் விஜய்யிடம் கேட்கும் கேள்விகளும் தாறுமாறாக உள்ளது.
Recommended Video

ரசிகர்கள் மகிழ்ச்சி
மேலும் ட்ரெயிலரில் வெளியான பயம்மா இருக்கா... இனிமே இன்னும் பயங்கரமா இருக்கும் என்ற வசனமும் இந்த புதிய ப்ரமோவில் இடம்பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த ப்ரமோக்களை சன் டிவியில் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த தொடர் ப்ரமோக்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











