நிறைவுக்கு வரும் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியல்.. க்ளைமாக்சில் இணையும் நடிகை இனியா!
சென்னை : சன் டிவியின் முக்கியமான தொடராக கண்ணான கண்ணே தொடர் இருந்து வருகிறது.
தந்தை மற்றும் மகளின் பாசத்தை மையமாக கொண்டு கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடருக்கு விரைவில் எண்ட்கார்ட் போடவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சன் டிவியின் முக்கியமான தொடரான ரோஜா நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்களின் பேவரைட்டான கண்ணான கண்ணே தொடரும் நிறைவடையவுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கண்ணான கண்ணே தொடர்
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சன்டிவியில் துவங்கப்பட்ட தொடர் கண்ணான கண்ணே. தந்தை -மகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் பல்வேறு சுவாரஸ்யங்களுடன் ரசிகர்களை சந்தித்தது. நடிகர் பிரித்வி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளை தாண்டி ரசிகர்களை மகிழ்வித்தது.

தந்தையின் அன்பை பெற போராட்டம்
பிரசவத்தின்போது தன்னுடைய மனைவி இறக்க காரணமான தன்னுடைய மகள் மீராவை வெறுக்கிறார் பிரித்வி. இதையடுத்து தன்னுடைய தந்தையின் அன்பை பெறுவதற்காக போராடுகிறார் மீரா. இதை அடிப்படையாக கொண்டு இந்தத் தொடர் சிறப்பான பல எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்தது.

மீரா -யுவா காதல்
இதனிடையே மீரா மற்றும் யுவாவின் காதல் மற்றும் திருமணத்தையும் இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டது. அவர்களின் கெமிஸ்ட்ரி தொடரின் கதையோட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. மேலும் வாழ்க்கையில் வெற்றியை சந்திக்க அவர்களின் போராட்டமும் சிறப்பாக அமைந்தது.

விரைவில் எண்ட் கார்ட்
இந்நிலையில் இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த க்ளைமாக்ஸில் மீராவின் அம்மாவாக நடித்திருந்த நடிகை இனியாவும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய கண்ணான கண்ணே சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரசிகர்கள் வருத்தம்
சன் டிவியில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ரோஜா சீரியல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்ததாக கண்ணான கண்ணே சீரியலும் முடிவடையவுள்ளதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை ப்ரைம் டைமில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்த நிலையில், அடுத்ததாக அந்த நேரத்தில் எந்த தொடர் ஒளிபரப்பாகும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சிறப்பான சன் டிவி சீரியல்கள்
தினந்தோறும் காலை முதல் இரவு வரை ரசிகர்களை அடுத்தடுத்த சீரியல்கள் மூலம் கவர்ந்து வருகிறது சன் டிவி. இதன்மூலம் டிஆர்பியையும் சிறப்பான வகையில் பெற்று வருகிறது. பழைய தொடர்களை முடிவுக்குக் கொண்டுவந்து புதிய தொடர்களையும் தொடர்ந்து களமிறக்கி வருகிறது. அந்தவகையில்தான் தற்போது கண்ணான கண்ணே தொடரும் நிறைவடையவுள்ளது.


Click it and Unblock the Notifications











