சன் தொலைக்காட்சி மூத்த ஒளிப்பதிவாளர் பெ.செந்தில்குமார் மறைவு
சென்னை: உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சன் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், (வயது 48 )இன்று (9/11/2019,)காலை 10 மணியளவில் இயற்கை எய்தினார்.
உயர் ரத்த அழுத்தத்தால் இரத்தக் குழாய்கள் வெடித்து, உயிருக்கு போராடி வந்த பி.செந்தில்குமார் சென்னை ராஜுவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பலனின்றி இயற்கை எய்தினார் .அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரோடும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம் .

சன் தொலைக்காட்சியின் மறைந்த ஒளிப்பதிவாளர் பி.செந்தில்குமார் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
வாழவேண்டிய வயதில், உடல் நலத்தில் உரிய கவனம் செலுத்தாததால் தொடர்ந்து நாம் நமது உறவுகளை- சக ஊடக நண்பர்களை இழந்து வருவது பெரும் வேதனையைத் தருகிறது.
செந்தில்குமாரின் மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளை நினைக்கும்போது பெரும் கவலை ஏற்படுகிறது. செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு உதவ வேண்டியது நமது கடமை.
இந்த திடீர் மரணங்கள், நாம் நமது உடல் -மன நலன்களைப் பாதுகாக்க வேன்டியதை நமக்கு அழுத்தமாக உணர்த்தி விட்டு செல்கிறது. உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
செந்தில்குமாரின் உடல், நாளை (10/11/19) ஞாயிறு காலை 9 மணி வரை ,எண் 58, மூன்றாவது பிரதான சாலை, ஜெயராம் நகர், டான் பாஸ்கோ பள்ளி அருகில், கொளத்தூர், சென்னை-99, என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது .
செந்தில்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு பிலிமி பீட் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா அமைதியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம்.


Click it and Unblock the Notifications











