»   »  வாவ்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படம் வித்துடுச்சாம்!

வாவ்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படம் வித்துடுச்சாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு வழியா சிவகார்த்திகேயனின் கனவு நிறைவடைய போகிறது..

பொன்ராம் இயக்கும் படத்துக்குப் பிறகு, ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தையும் ஆர்டி ராஜாதான் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் வியாபாரம்தான் இப்போது தமிழ் சினிமாவின் ஆச்சர்யமாக உள்ளது. இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத இந்தப் படத்தின் வியாபாரம் இப்போதே பெரிய தொகைக்கு முடிந்துவிட்டது.

Sun TV snaps Sivakarthikeyan’s next for whopping price

அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ரஹ்மான் ஒப்பந்தமான செய்தி கசிந்ததுமே படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலைக்கு வாங்கிவிட்டது சன் டிவி.

முன்னணி நடிகர்களின் பல படங்களின் சாட்டிலைட் உரிமைகள் இன்னும் வியாபாரமாகாமல் உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை தேடிப் போய் வாங்கியிருக்கிறது சன் டிவி. அதுமட்டுமல்ல, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படமும் சன் டிவிக்குதானாம்.

சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வளர்ச்சி பார்த்து வாய் பிளக்கிறது கோடம்பாக்கம்.

English summary
Sun TV has snapped Sivakarthikeyan’s next movie with Ravikumar for whopping price

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil