twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா… மனம் திறந்த விஜய்

    By Mayura Akilan
    |

    'குஷி' படத்திற்கு முன் வாழ்வா சாவா என்ற நிலை இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னவாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் 'குஷி' என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா அதற்காக இப்போது அதற்கு நன்றி கூறுகிறேன் என்று நடிகர் விஜய் பாராட்டினார்.

    எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இசை'. இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜும் இணைந்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் நடிகர் விஜய், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் முருகதாஸ், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு பேசினர். சன்டிவியில் ஞாயிறு பிற்பகலில் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பானது.

    கதையே இல்லையே?

    கதையே இல்லையே?

    'குஷி' படம் ரிலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார், எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள். கதை என்ன இருக்கு? கதையே இல்லையே? என்றார். நான் சொன்னேன் சரிதான் ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார் என்றேன்.

    பாராட்டிய விஜய்

    பாராட்டிய விஜய்

    'நண்பன்' பட சூட்டிங்கில் 'இசை' படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்'' என்று மனம் திறந்து பாராட்டினார் விஜய்.

    கதையை கேட்டு மயங்கினேன்

    கதையை கேட்டு மயங்கினேன்

    இதில் இப்படத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் பேசும்போது, ‘‘நான் 2 படங்களில் நடிக்க மறுத்தது உண்டு. ஒன்று 'அமைதிப்படை' இன்னொன்று' இசை'. கதை கேட்டவுடன் என் முடிவை இரண்டு படங்களுமே மாற்றியது.

    மீண்டும் வில்லனா?

    மீண்டும் வில்லனா?

    75 படங்கள் வில்லனாக நடித்துவிட்டு பல அசௌகரியங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு கதாநாயகனானபின் மணிவண்ணன் 'அமைதிப்படை'யில் வில்லனாக நடிக்க அழைத்தார். அதற்கு மறுத்தேன். கதையையும் கேரக்டரையும் சொன்னபிறகு முடிவை மாற்றினேன்.

    இசையில் வில்லன்

    இசையில் வில்லன்

    அதேபோல 'இசை'யில் வில்லன் என்றதும் தட்டிக் கழித்தேன், தவிர்க்க நினைத்தேன். கதையையும் என் கேரக்டர் பற்றிச் சொன்னதும் என் முடிவு மாறியது. வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே, இவரே கதாநாயகனாக நடிக்கிறாரே என்று நினைத்தேன். நாலாவது நாள் அவருடன் நான் நடிக்கும்போது அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன் என்றார்.

    புதுமையான கதை

    புதுமையான கதை

    எவ்வளவோ படம் பார்த்துவிட்டு 'படம் சூப்பர்' என்று மனசாட்சியே இல்லாமல் பொய் சொன்னதுண்டு. இது நிஜமாகவே நல்ல படமாக வரும். முற்றிலும் புதுமையான கதை. புதுமையான காட்சிகள். கதை பிடிக்கவே சம்பளமே வாங்காமல் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் சம்பளத்துக்கு பேரம் பேசினேன். அவரும் கேட்டதை கொடுத்தார் என்றார்.

    பெருமையாக இருக்கிறது

    பெருமையாக இருக்கிறது

    நான் ப்ளஸ் ஒன் படித்தபோது 'குஷி' படத்தை ரோகினி தியேட்டரில் பார்த்தேன். இப்போது விஜய், சூர்யா இவர்களுடன் நான் அமர்ந்திருப்பதில் பெருமையாக இருக்கிறது.

    எஸ்.ஜே.சூர்யா படங்களில் அவரது இசைஞானம் தெரியும். அவர் படப்பாடல்களைக் கேட்டால் கேட்டு வாங்கியது தெரியும்.

    சூர்யா பேசுவதே பாடுவது மாதிரி இருக்கும். அவர் இசையமைப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என்றார் தனுஷ்.

    நீண்டகால நட்பு

    நீண்டகால நட்பு

    விழாவில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், 17 ஆண்டுகால நட்பு எங்களுடையது. 'குஷி' படத்தில் அவருடனும் விஜய் சாருடனும் வேலை பார்த்ததைக் கணக்கு பார்த்தால் 'கத்தி' எனக்கு விஜய் சாருடன் மூன்றாவது படம். கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் சூர்யா திறமை அபாரமானது. நான் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது அவரை மனதில் வைத்துக் கொண்டுதான் உருவாக்குவேன்.

    இசையார்வம் அதிகம்

    இசையார்வம் அதிகம்

    அவரது இசையார்வம் அளவிட முடியாதது. பிரபலமான பாடல்களை எல்லாம் பாடிக் காட்டுவார். பாடகர்களின் குரல்களை எடுத்துவிட்டு இசையை ஓடவிட்டு தானே பாடுவார்.சத்யராஜ் நடித்த காட்சிகளைப் பார்த்து படம் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது."என்றார் முருகதாஸ்.

    மிரட்டிய ட்ரெயிலர்

    மிரட்டிய ட்ரெயிலர்

    நிகழ்ச்சியின் இடையே பாடல்காட்சிகளும், ட்ரெயிலரும் ஒளிபரப்பானது. இசை படத்தில் நீண்டநாட்களுக்குப் பின்னர் ஒரு புதுவிதமான எஸ்.ஜே.சூர்யா தெரிந்தார்.

    English summary
    The audio launch of SJ Suryah's 'Isai' will be aired on Sun TV on Nov 16th (Sunday) at 4.30 p.m. The audio was launched at the channel's studio a few days ago by star actor Dhanush and Vijay. While Vijay has worked with SJ Suryah in 'Kushi', Dhanush hasn't. The film is a musical drama, which also marks the debut of SJ Surya as music director.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X