PSBB பள்ளி விவகாரம்.. பைரவா படத்தை களமிறக்கிய சன் டிவி.. வைரலாகும் மேக்கிங் வீடியோ!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மேக்கிங் வீடியோவை சன் டிவி வெளியிட்டு வைரலாக்கி உள்ளது.
அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் மீண்டும் விஜய் நடிப்பில் உருவாக்கிய படம் தான் பைரவா.
பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பைரவா படத்தை சன் டிவி சன் டே ஸ்பெஷலாக போட்டுள்ளது.

சன் டிவியில் பைரவா
கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு மற்றும் சதீஷ் நடிப்பில் வெளியான படம் பைரவா. ஏற்கனவே பலமுறை சன் டிவியில் போடப்பட்ட இந்த படத்தை மீண்டும் சன் டே ஸ்பெஷலாக ஒரு காரணத்துடனே போட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

பைரவா கதை
மருத்துவ கல்லூரி ஒன்றை நடத்தி வரும் பெரும் தொழிலதிபரான ஜகபதி பாபு தனது கல்லூரியை ஆடிட்டிங்கில் இருந்து காப்பாற்ற கல்லூரியில் படிக்கும் பெண்களே அதிகாரிகளின் காமப் பசிக்கு இரையாக்கும் கொடுமையை நாயகி கீர்த்தி சுரேஷ் தட்டிக் கேட்க, அவரை காப்பாற்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கும் காவல் தெய்வமாக விஜய் நடித்துள்ள படம் தான் பைரவா.

பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்
சென்னையில் உள்ள பிஎஸ்பிபி எனும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும், அந்த பள்ளியை சேர்ந்த சில ஆசிரியர்களும் இந்த விவாகரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுதான் காரணம்
பிஎஸ்பிபி பள்ளி மட்டுமின்றின் ஏகப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இதே போல மாணவிகள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடைபெற்று வருவது அம்பலம் ஆகி வருகிறது. இந்நிலையில், சன் டிவியில் அதன் காரணமாகத்தான் பைரவா திரைப்படம் ஒளிபரப்பாகி வருவதாக சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பைரவா மேக்கிங்
மேலும், பைரவா படத்தின் ஒளிபரப்பை தொடர்ந்து அந்த படத்தின் மேக்கிங் வீடியோவையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. ஃபைட்டர்ஸை பந்தாடும் காட்சிகளுக்கு பிறகு அவர்களிடத்தில் அடிபட்டு விட்ட்தா என்று விசாரிப்பதும், அடித்ததற்காக மன்னிப்பு கேட்பதுவுமாக நடிகர் விஜய் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











