கூலி.. கரவொலி.. ஆஹா கேட்கவே எவ்ளோ நல்லா இருக்கு.. டாப் 10 சுரேஷ் கூலி விமர்சனம்.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை: புதிய படங்கள் வந்ததும் அந்த வார இறுதியில் சன் டிவியில் வெளியாகும் டாப் 10 நிகழ்ச்சி மற்றும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேஷின் விமர்சனத்தை பார்த்த 90ஸ் கிட்ஸுக்கு மீண்டும் அவரது விமர்சனம் தற்போது சன் நியூஸ் செய்தி சேனலில் வெளியாகி இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிரசாந்த் ரங்கசாமி, பரத்வாஜ் ரங்கன், ப்ளூ சட்டை மாறன் என ஏகப்பட்ட யூடியூப் விமர்சகர்கள் முதல் பத்திரிகைகள், டிஜிட்டல் வெப்சைட் என அனைத்து இடங்களிலும் கூலி படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

Sun Tv Top 10 Suresh Coolie Review makes Rajinikanth s fans very happy
Photo Credit:

அதிலும், பிரசாந்த் ரங்கசாமி, ப்ளூ சட்டை மாறன் எல்லாம் ஒட்டுமொத்தமாக நெகட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்த நிலையில், தற்போது படம் வெளியாகி 4 நாட்களுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் சன் டிவி டாப் 10 சுரேஷின் விமர்சனத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சன் டிவி டாப் 10 சுரேஷின் கூலி விமர்சனம்: கூலி - போலி, கூலி - காலி என பலரும் ஒரு படத்தை முடித்து விடும் நோக்கத்தில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், கமர்ஷியல் படங்களில் திடீரென லாஜிக் தேடவும் ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், ரஜினிகாந்தின் காந்த சக்தி திரையரங்குகளை அதிர வைத்து வருகிறது என்றும் லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் திரைக்கதை சொதப்பலை அழகாக திருத்தி சொன்ன விதத்திலும் சுரேஷின் கூலி விமர்சனம் ரஜினிகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறைகளையும் கூலாக சொல்றாரு: கூலி திரைப்படத்திற்கான விமர்சனத்தில் டாப் 10 சுரேஷும் வெறும் பாராட்டுக்களை மட்டுமே சொல்லாமல், படத்தில் இருந்த குறைகளையும் கூலாக சொல்லியிருக்கும் பதம் ரசிகர்களை கவர்கிறது. ஒரு விமர்சனம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் ஒரு படத்தை மொத்தமாக காலி செய்யும் விதமாக இருக்கக் கூடாது என்றும் இன்றைய காலத்தில் டாக்ஸிக் மட்டுமே அதிகமாக உள்ளது என்றும் கூறுகின்றனர். தியேட்டரில் படம் பார்க்க சென்ற ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவருக்கும் அவர் வரும் காட்சிகள் எல்லாமே செம ட்ரீட் தான் என்றும் ரச்சிதா ராம், செளபின் சாஹீர் பர்ஃபார்மன்ஸ் சூப்பர் என்றும் ஸ்ருதிஹாசன் எதுக்கு கோபப்படுறாருன்னே தெரியல என்று கலாய்த்தும், மோனிகா பாடல் இடம்பெற்ற இடம் சரியில்லை என்பதை குறிப்பிட்டும், சத்யராஜ் சாகும் போதும் நக்கலடிப்பது நல்ல சீன் என்றும் கேமியோவாக வரும் அமீர்கான் பீடி பிடித்து செல்வதையும் பகடி செய்து விமர்சனத்தைக் கொடுத்திருக்கிறார்.

லோகேஷுக்கு பிரஷர்?: மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு ஜாக்பாட் போல விஜய், கமல் மற்றும் ரஜினிகாந்த் படங்களை இயக்கும் வாய்ப்புகள் குவிந்தன. விஜய் மற்றும் ரஜினிகாந்தை வைத்து படம் பண்ணும் இயக்குநர்களுக்கு எழும் பிரஷர் லோகேஷ் கனகராஜுக்கும் அதிகமாகவே வந்த நிலையில் தான் கூலி படத்தை அவர் நினைத்தது போல எடுக்க முடியாமல், பான் இந்தியா படமாக கொடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு ஸ்டேட் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க நினைத்து மூலக் கதையில் கோட்டை விட்டு விட்டார் என்றே கூறுகின்றனர். ரிலீஸ் டைம் பிரஷர் இல்லை என்ற நிலையிலும், லோகேஷ் இந்த முறை சொதப்பியது ரஜினிகாந்த் ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X