டாப் குக் டூப் குக் 2 டைட்டிலை வென்ற பெசண்ட் ரவி.. பரிசு எவ்வளவு தெரியுமா?
சென்னை: சன் தொலைக்காட்சி முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸுடன் இணைந்து, டாப் கூக்கு டூப் குக்கு சீசன் 2 ஆகஸ்ட் 17ந் தொடங்கியது. பஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைளிலும் ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது டாப் கூக்கு டூப் குக்கு சீசன் 2 டைட்டில் வின்னர் ஆக பெசண்ட் ரவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டாப் கூக்கு டூப் குக்கு சீசன் 1 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில், 9 பிரபலங்கள் சமைக்க, டூப்புகளாக 9 பேரும் கலந்து கொண்டு, சமைப்பவர்களுக்குதொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களை மீறி குக்குகள் சமைத்து அசத்த வேண்டும். இதில் சீசன் 1ல் நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா ஆகியோரை வெற்றி பெற்றனர்.

டாப் குக்கு டூப் குக்க: முதல் சீசன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, டாப் குக்கூ டூப் குக்கூ சீசன் 2 ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதில், போட்டியாளராக நடிகை கிரண், நடிகை ஷிவானி நாராயணன், டெலன் டேவிஸ் ஆடுகளம் சீரியல் நடிகை, பிரீதா கதைபோமா வெப் தொடர், நடிகை பிரியங்கா, நடிகர் ரோபோ சங்கர், நகைச்சுவை நடிகர் TSR, வஹீசன் இலங்கை தமிழ் ராப் பாடகர், பெசன்ட் ரவி ஸ்டண்ட் மாஸ்டர் ஆகியோர் இருந்தனர். டூப் குக்காக தீனா,அருண் தொகுப்பாளர், பரத்,மோனிஷா, ஜி பி முத்து, ஆதித்யா கதிர், நிக்கி மீனாட்சி, கமலேஷ், லட்சுமி மதுரையைச் சேர்ந்த இல்லத்தரசி ஆகியோர் டூப்பாக களமிறங்கினர். நடுவராக வெங்கடேஷ் பட் மற்றும் ராம்மோகன் ஆகியோர் இருந்தனர்.
டைட்டில் வின்னர்: விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த டாப் குக்கூ டூப் குக்கூ சீசன் 2 டைட்டில் வின்னராக பெசன்ட் ரவி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், நடிகராக இருந்தாலும், சென்னையில் ஒரு ஹோட்டலையும் நடத்தி வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தன்னுடைய ஓட்டலின் ஸ்பெஷலான சாப்பாட்டை செய்து காட்டி அனைவரையும் வியக்க வைத்து பைனல் வரை வந்து டைட்டிலை வென்றுள்ளார். அவருக்கு ஸ்டார் of சீசன் 2 என்ற பட்டமும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களும் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் நன்றி: இதுகுறித்து பெசண்ட் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், பெசண்ட் நகரின் கடற்கரையிலிருந்து வெற்றியாளர் பட்டம் வரை இந்த பயணம் வியர்வை, அர்ப்பணிப்பு மற்றும் என் வேர்களின் சுவைகளால் கட்டமைக்கப்பட்டது. இன்று, நான் வெறும் கோப்பையை மட்டும் வைத்திருக்கவில்லை, என்னை செதுக்கிய ஒவ்வொரு பாடம், ஒவ்வொரு தோல்வி மற்றும் ஒவ்வொரு கனவையும் நான் வைத்திருக்கிறேன். இந்த நம்பமுடியாத வாய்ப்பை வழங்கிய media masonsக்கு எனது மனமார்ந்த நன்றிகள், என்னை ஊக்கப்படுத்திய வெங்கடேஷ் பட் மற்றும் ராம்மோகனுக்கும் நன்றி, மேலும் நாங்கள் பகிர்ந்து கொண்ட கற்றல் மற்றும் மறக்க முடியாத தருணங்களுக்காக எனது சக போட்டியாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











