»   »  எய்ட்ஸ் விழிப்புணர்வு: மாபெரும் கலை நிகழ்ச்சி எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக சன் டிவியுடன் உதவியுடன் இன்று ஹைதராபாத் நகரில் தென் மாநிலங்களின் திரையுலகினர் பங்குபெரும் மிகப் பெரிய கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.ஹீரோஸ் திட்டம் என்ற பெயரில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே மற்றும் தொழிலதிபர் பரமேஷ்வர் கோத்ரெஜ் ஆகியோர்இணைந்து நடத்தி வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.ஹைதராபாத் நகரில் இன்று நடைபெறும் இந் நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிரஞ்சீவி, த்ரிஷா, ஷ்ரியா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.இசைஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சிக்காக சிறப்புப் பாடல் ஒன்றை வடிவமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை இளையராஜாவே நேரடியாக மேடையில்பாடவுள்ளார்.இந்தக் கலை நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் ரிச்சர்ட் கெரே, கமல்ஹாசன், சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன்,பரமேஷ்வர் கோத்ரெஜ் ஆகியோர் விளக்கினர்.கமல்ஹாசன் பேசுகையில், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டியது நமது சமூகக் கடமை. எனவேதான்எந்தவித வணிக நோக்கம் இன்றி நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது முதலுதவி சிகிச்சை போலத்தான். எனது ரசிகர்கள் இந்தப் பணியில் முதல்ஆளாக ஈடுபடுவார்கள், எப்போதும் துணை நிற்பார்கள் என்றார்.கலாநிதி மாறன் பேசுகையில், இந்த கலை நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பி அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்அனைத்துமே எய்ட்ஸ் விழிப்புணர்ச்சித் திட்டத்துக்கு வழங்கப்படும் என்றார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு: மாபெரும் கலை நிகழ்ச்சி எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக சன் டிவியுடன் உதவியுடன் இன்று ஹைதராபாத் நகரில் தென் மாநிலங்களின் திரையுலகினர் பங்குபெரும் மிகப் பெரிய கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.ஹீரோஸ் திட்டம் என்ற பெயரில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே மற்றும் தொழிலதிபர் பரமேஷ்வர் கோத்ரெஜ் ஆகியோர்இணைந்து நடத்தி வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.ஹைதராபாத் நகரில் இன்று நடைபெறும் இந் நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிரஞ்சீவி, த்ரிஷா, ஷ்ரியா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.இசைஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சிக்காக சிறப்புப் பாடல் ஒன்றை வடிவமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை இளையராஜாவே நேரடியாக மேடையில்பாடவுள்ளார்.இந்தக் கலை நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் ரிச்சர்ட் கெரே, கமல்ஹாசன், சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன்,பரமேஷ்வர் கோத்ரெஜ் ஆகியோர் விளக்கினர்.கமல்ஹாசன் பேசுகையில், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டியது நமது சமூகக் கடமை. எனவேதான்எந்தவித வணிக நோக்கம் இன்றி நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது முதலுதவி சிகிச்சை போலத்தான். எனது ரசிகர்கள் இந்தப் பணியில் முதல்ஆளாக ஈடுபடுவார்கள், எப்போதும் துணை நிற்பார்கள் என்றார்.கலாநிதி மாறன் பேசுகையில், இந்த கலை நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பி அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்அனைத்துமே எய்ட்ஸ் விழிப்புணர்ச்சித் திட்டத்துக்கு வழங்கப்படும் என்றார்.

Subscribe to Oneindia Tamil

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக சன் டிவியுடன் உதவியுடன் இன்று ஹைதராபாத் நகரில் தென் மாநிலங்களின் திரையுலகினர் பங்குபெரும் மிகப் பெரிய கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஹீரோஸ் திட்டம் என்ற பெயரில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே மற்றும் தொழிலதிபர் பரமேஷ்வர் கோத்ரெஜ் ஆகியோர்இணைந்து நடத்தி வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரில் இன்று நடைபெறும் இந் நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிரஞ்சீவி, த்ரிஷா, ஷ்ரியா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.


இசைஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சிக்காக சிறப்புப் பாடல் ஒன்றை வடிவமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை இளையராஜாவே நேரடியாக மேடையில்பாடவுள்ளார்.

இந்தக் கலை நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் ரிச்சர்ட் கெரே, கமல்ஹாசன், சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன்,பரமேஷ்வர் கோத்ரெஜ் ஆகியோர் விளக்கினர்.

கமல்ஹாசன் பேசுகையில், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டியது நமது சமூகக் கடமை. எனவேதான்எந்தவித வணிக நோக்கம் இன்றி நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.


எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது முதலுதவி சிகிச்சை போலத்தான். எனது ரசிகர்கள் இந்தப் பணியில் முதல்ஆளாக ஈடுபடுவார்கள், எப்போதும் துணை நிற்பார்கள் என்றார்.

கலாநிதி மாறன் பேசுகையில், இந்த கலை நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பி அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்அனைத்துமே எய்ட்ஸ் விழிப்புணர்ச்சித் திட்டத்துக்கு வழங்கப்படும் என்றார்.


Read more about: aids sun tvs gesture

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil