11 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. வெளியானது டீசர்

சென்னை: 11 வருடங்களுக்கு முன் நகுல் மற்றும் சுனைனா இருவரும் இணைந்து முதன்முதலில் நடித்த படம் காதலில் விழுந்தேன் இந்த படம் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த வேளையில் இப்போது சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் சுனைனா.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படத்தின் டீசரை சுனைனா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மற்றும் அவரது யூடியூப் சேனலிலும் பதிவிட்டுள்ளார்.

 நாக்க முக்கா புகழ்

நாக்க முக்கா புகழ்

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படம் மிகப்பெரிய எதிர் பார்ப்புடன் மிகப்பெரிய பொருட்செலவில் மிக வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்தப் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி அனைவராலும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்த நகுல் மற்றும் சுனைனா நடிப்பை பலர் பெரிதும் பாராட்டி வந்தனர்.

 வெற்றி ஜோடி

வெற்றி ஜோடி

அப்போது இந்த படத்தில் வரும் நாக்க முக்கா என்ற பாடல் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் இந்தியா முழுவதும் ஏன் உலகமுழுவதும் அந்த பாடலுக்கு ஆடாத கால்களே இல்லை போடாத கலை நிகழ்ச்சிகளே இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த பாடல்.

 மீண்டும் இணைந்து

மீண்டும் இணைந்து

ஒரு சிறந்த காதல் ஜோடி என்று பலராலும் புகழப்பட்ட நகுல் மற்றும் சுனைனா மீண்டும் அடுத்த ஆண்டே மாசிலாமணி என்ற படத்தின் மூலம் இணைந்தனர். அந்தப் படத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் இணையாத போது அனைவரும் இந்த ஜோடியை மீண்டும் எதிர்பார்ப்பதாக சொல்லி வந்த நிலையில் தற்போது அதற்கான காலம் கூடி வந்திருக்கிறது.

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நகுல் மற்றும் சுனைனா இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக "எரியும் கண்ணாடி" என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை R. கண்ணன் இயக்கியிருக்கிறார் மேலும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மணிரத்னம்

மணிரத்னம்

மூன்றாவது முறையாக இந்த ஜோடி இணையும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் கதையை காதல் கதைகளின் மாஸ்டர் என்று அழைக்கப்படும் மணிரத்னம் எழுதி இருக்கிறார் என்றதும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நம்மிடம் தொற்றி கொள்கிறது. மேலும் பாடல்கள் வைரமுத்துவின் வரிகளில் என எல்லா பக்கமும் மிகப்பிரபலமான கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ள இந்த படம் எப்போது வெளிவரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 காதலில் விழுந்தேன் 2 ?

காதலில் விழுந்தேன் 2 ?

இதற்கிடையில் யாரும் எதிர் பார்க்காதவாறு சுனைனா இந்த படத்தின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் சேனல் தற்போது பதிவிட்டுள்ளார். சில நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசர் எந்த ஒரு வசனங்களும் இல்லாமல் இரண்டு காதலர்களுக்கு இடையே உள்ள அழுத்தமான காதலை மட்டும் சொல்லி இருக்கின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X