என்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்
சென்னை: தெறி படத்தில் நடித்தது குறித்து ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார் சுனைனா.
அட்லீ படத்தில் ஹீரோவை ஹீரோயின் பிரதர் என்று கூறும் வசனம் கண்டிப்பாக இருக்கும். அட்லீயின் வாழ்வில் நடந்ததை மறக்க முடியாமல் தான் அவர் அந்த வசனத்தை படத்தில் வைக்கிறார் போன்று என்று ரசிகர்கள் கூறுவதுண்டு.
இந்நிலையில் தெறி படத்தில் நடித்தது குறித்து சுனைனா வருத்தப்பட்டுள்ளார்.

சுனைனா
வருத்தம் என்ற வார்த்தையை பார்த்ததும் என்னது, எங்க விஜய் அண்ணா படத்தில் நடித்ததில் வருத்தமா என்று யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். உங்க விஜய் அண்ணாவை பிரதர் என்று கூப்பிட வைத்துவிட்டார்களே என்பது தான் சுனைனாவுக்கு வருத்தம்.

விஜய்
தெறி படத்தில் பிரதர் எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு பிரதர் என்று விஜய்யிடம் வசனம் பேசியிருந்தார் சுனைனா. விஜய்யை பார்த்து பிரதர் என்று கூப்பிட அவருக்கு ஒரு மாதிரியாக இருந்ததாம்.

காளி
கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காளி படத்தில் நடித்துள்ளார் சுனைனா. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது தான் சுனைனா விஜய் பற்றி கூறியுள்ளார்.

அட்லீ
தெறி படத்தில் நான் வந்த காட்சிகள் சில நிமிடங்கள் தான். ஆனால் அதை இரண்டு நாட்களாக ஷூட் செய்தார்கள். விஜய்யுடன் சேர்ந்து நடித்ததை என்னால் என்றுமே மறக்கவே முடியாது என்று சுனைனா தெரிவித்துள்ளார்.

பதட்டம்
19 படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் இன்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு வந்தால் பதட்டமாக உள்ளது. முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் பயத்தில் அழுதுவிட்டேன். காளி படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது என்கிறார் சுனைனா.


Click it and Unblock the Notifications











