ஸ்ரேயாவுக்கு முன்னாடி ரஜினி பார்க்கும் ’மங்களா’ இவங்கதான்.. வைரலாகும் நீக்கப்பட்ட சிவாஜி பட சீன்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றில் பிரபல நடிகை நடித்துள்ளார். தற்போது அந்த காட்சி வைரலாகி வருகிறது.

Recommended Video

DIRECTOR HALITHA SHAMEEM SPEECH| SILLUKARUPATTI TEAM DISCUSSION | FILMIBEAT TAMIL

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக், சாலமன் பாப்பையா, ரகுவரன், பட்டிமன்றம் ராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் சிவாஜி.

சிவாஜி படத்திற்காக எடுக்கப்பட்ட பல நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சுனைனா நடித்த ஒரு காட்சி தீயாய் பரவி வருகிறது.

அறிமுகம்

அறிமுகம்

காதலில் விழுந்தேன் படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து நகுலுடன் இணைந்து மாசிலாமணி படத்தில் நடித்த அவர், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு

கடந்த ஆண்டு

கடந்த ஆண்டு ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் அள்ளி இருந்தார் சுனைனா. அடுத்ததாக யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்திற்கு சுனைனா வெயிட்டிங்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் கோயிலில் பெண் பார்க்கும் காமெடி படலத்தில் நடிகை சுனைனா நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த வீடியோ தற்போது இந்த லாக்டவுன் நேரத்தில் மீண்டும் தீயாய் பகிரப்பட்டு வருகிறது.

மங்களா

மங்களா

ஸ்ரேயாவுக்கு முன்பாக கோயிலில் சேலை கட்டி, குடும்ப குத்து விளக்காக மங்களாவாக அந்த வீடியோவில் வருகிறார் நடிகை சுனைனா. அவரை பார்த்து ரஜினிக்கு பிடித்துப் போக, அவர் பின்னாலே வர, காரில் ஏறுகிறார் சுனைனா. காரில் வேட்டி மாற்றும் காட்சி படத்தில் இருந்த நிலையில், இந்த நீக்கப்பட்ட காட்சியில் சுனைனாவின் கார் ஆடுகிறது.

மாடர்ன் கேர்ள்

மாடர்ன் கேர்ள்

ரஜினியும் விவேக்கும், காருக்கு அருகே சென்று, கண்ணாடியை இறக்கி பார்க்க, உள்ளே மாடர்ன் உடையில் சுனைனா இருக்கிறார். சேலையில் வந்த உங்க சிஸ்டர் எங்க என விவேக் கேட்க, அருகே கழட்டிப் போட்ட புடவையை காட்டி விட்டு, கோயிலுக்கு போகும் போது சேலை, வெளியே போகும் போது ஜீன்ஸ் என வசனம் பேசிவிட்டு நகர்கிறார் சுனைனா.

சைடு ரோல்

சைடு ரோல்

சிவாஜி படத்தில் அந்த காட்சி நீக்கப்படாமல் இருந்தால், நடிகை சுனைனாவிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்திருக்கும் என்றும், நல்ல வேளை அதை நீக்கிட்டாங்க என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் தெறி, விஷாலின் சமர், தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா என பல படங்களில் துணை நடிகையாக சுனைனா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X