அடையாளமே தெரியலையே.. நம்ம சுனைனாவா இது.. பிரபுதேவா பாட்டுக்கு அப்பவே அப்படி ஆடியிருக்காங்க!

சென்னை: நடிகை சுனைனா தனது சிறு வயதில் பள்ளியில் பிரபுதேவா பாடலுக்கு ஆண்டு விழாவின் போது நடனமாடிய த்ரோபேக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஏகப்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் சுனைனாவுக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை அள்ளிக் கொடுத்தது.

நாக்பூர்

நாக்பூர்

மகாராஷ்ட்ராவில் உள்ள நாக்பூரில் பிறந்தவர் நடிகை சுனைனா. படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கே தான். மாடலிங் துறையில் ஆர்வம் காட்டிய சுனைனாவுக்கு 2005ம் ஆண்டு குமார் vs குமாரி எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, சம்திங் ஸ்பெஷல், 10த் கிளாஸ் என இரு படங்களில் நடித்தார்.

சூப்பர்ஸ்டாரின் சிவாஜி

சூப்பர்ஸ்டாரின் சிவாஜி

பெஸ்ட் பிரெண்ட்ஸ் எனும் மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமான இவர், மறுபடியும் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார். பின்னர், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. பின்னர் டெலிடட் சீனாக வெளியாகி ஹிட் ஆனது.

காதலில் விழுந்தேன்

காதலில் விழுந்தேன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படம் தான் தமிழில் இவருக்கு அதிகாரப்பூர்வ அறிமுக திரைப்படம். பி.வி. பிரசாத் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் வெளியான அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட்டான நிலையில் தொடர்ந்து சுனைனாவுக்கு தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நல்ல நடிப்பு

நல்ல நடிப்பு

காதலில் விழுந்தேன் படத்திற்கு பிறகு கோலிவுட்டிலேயே செட்டில் ஆகி விட்டார் சுனைனா. வம்சம், நீர்ப்பறவை என நல்ல கதைகளை தேர்வு செய்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். ஆனால், கமர்ஷியலாக நடித்த படங்கள் இவருக்கு பெரிதாக பலனளிக்கவில்லை. தெறி, எனை நோக்கிப் பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் வந்து சென்றார்.

சில்லுக்கருப்பட்டி

சில்லுக்கருப்பட்டி

நடிகை சுனைனாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் அதள பாதாளத்திற்கு சென்ற போது இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் மீண்டும் சுனைனாவின் நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அம்முவாக நடித்த சுனைனாவை பாராட்டித் தள்ளினர்.

பள்ளி ஆண்டு விழாவில்

பள்ளி ஆண்டு விழாவில்

சமீபத்தில் வெளியான சுனைனாவின் ட்ரிப் திரைப்படம் ரொம்ப சுமாரான படமாகவே அமைந்தது. எரியும் கண்ணாடி எனும் படத்தில் அடுத்ததாக நடித்து வருகிறார். இந்நிலையில், நாக்பூரில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆண்டு விழாவில் நடனமாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் சுனைனா.

அடையாளமே தெரியலையே

அடையாளமே தெரியலையே

சுனைனாவின் இந்த த்ரோபேக் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், யாரு இது சுனைனாவா? அடையாளமே தெரியலையே என்றும், ரொம்ப க்யூட்டாக இருக்கீங்க, அப்பவே பிரபுதேவா பாட்டுக்குத் தான் டான்ஸா? என்றும் கமெண்ட்டுகளில் ஹார்ட்டீன்களை குவித்து வருகின்றனர். பிரபுதேவா மற்றும் மாதுரி தீக்‌ஷித் பாடலின் பழைய போட்டோக்களையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X