நடு விரலை காட்டும் சுனைனா.. சர்ச்சையை கிளப்பிய ‘ரெஜினா’ பட போஸ்டர்.. இயக்குநர் யாரு தெரியுமா?
சென்னை: நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி என சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த சுனைனா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகப் போகும் புதிய படத்தில் நடித்துள்ளார்.
ரெஜினா என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தின் மல்டி லேங்குவேஜ் போஸ்டர்கள் தற்போது வெளியாகி உள்ளன.
போஸ்டரில் நடு விரலை காட்டியபடி நடிகை சுனைனா போஸ் கொடுத்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நல்ல நடிப்பு
காதலில் விழுந்தேன் படத்தில் இருந்தே சுனைனா மீது கிரஷ் உடன் பல ரசிகர்கள் திரிந்து வருகின்றனர். நீர்ப்பறவை, சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை அசால்ட்டாக வெளிப்படுத்தி இருப்பார் நடிகை சுனைனா. தெறி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் சைடு ரோல் கிடைத்த நிலையில், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு பெரிய அளவில் கிடைப்பதில்லை.

ஹீரோயின் சென்ட்ரிக்
நடிகை சுனைனா சமீப காலமாக ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ணும் படங்களை தவிர்த்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலேயே கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. கடைசியாக ட்ரிப் படத்தில் யோகி பாபு மற்றும் கருணாகரன் உடன் இணைந்து நடித்திருந்தார். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

ரெஜினா ஃபர்ஸ்ட் லுக்
ட்ரிப் படத்தைத் தொடர்ந்து சுனைனா எந்த படத்தில் தான் நடிக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அட்டகாசமான போஸ்டருடன் ரெஜினா எனும் படத்தில் அதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சுனைனா. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார். மலையாள போஸ்டரை இயக்குநர் ஆஷிக் அபு வெளியிட்டார்.

யார் இயக்குநர்
பைப்பின் சுவட்டிலே பிரணயம் மற்றும் ஸ்டார் உள்ளிட்ட மலையாள படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் டாமின் டி சில்வா இந்த படத்தின் மூலம் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சாதாரண வீட்டுப் பெண் எப்படி எக்ஸ்ட்ராடினரி காரியங்களை செய்பவளாக மாறுகிறார் என்பது தான் கதை என்கின்றனர்.

நடு விரல் சர்ச்சை
கூலர்ஸ் அணிந்து கொண்டு வாயை பிளந்து சிரிக்கும் சுனைனா ஒரு கையில் துப்பாக்கி வைத்திருக்கிறார். இன்னொரு கையில் உள்ள நடுவிரலை காட்டியபடி போஸ்டருக்கு போஸ் கொடுத்துள்ளார். இப்படி சுனைனா நடு விரலை காட்டியிருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பி கண்டனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











