நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

சென்னை : பிரபல நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் வீட்டில் உறுப்பினர்களைத் தவிர வேறு யாருடனும் தான் தொடர்பில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

கோரப்பிடியில்

கோரப்பிடியில்

கொரோனாவின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து விட்டது. ஆனால் இரண்டாவது அலையில் இருந்து மீள்வதற்காக தனது ஆவேசப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே வாரத்தில் 5வது முறையாக நேற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.

3,754 பேர் உயிரிழப்பு

3,754 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,46,116 ஆக உயர்ந்துள்ளது.

28,897 பேர் பாதிப்பு

28,897 பேர் பாதிப்பு

தமிழகத்தில் நேற்று மட்டும் 28 ஆயிரத்து 897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 13,80,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 24ந் தேதி முதல் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இந்நிலையில் பிரபல நடிகை சுனைனாவுக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டதாவும் அந்த சோதனையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: சுனைனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X