முஸ்லீமுடன் காதல்: நடிகரின் சகோதரியை அடிப்பதோடு மயக்க மருந்து கொடுக்கிறார்கள்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் சகோதரி ஒரு இஸ்லாமியரை காதலிப்பதால் அவரை அடிப்பதோடு, மயக்க மருந்து கொடுப்பதாக நடிகை கங்கனா ரனாவத்தின் அக்கா ரங்கோலி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் சகோதரி சுனைனா ருஹைல் அமின் என்கிற இஸ்லாமியரை காதலித்து வருகிறார். ருஹைல் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை தீவிரவாதி என்கிறார் என் தந்தை ராகேஷ் ரோஷன், மேலும் என்னை அடிக்கிறார் என்று சுனைனா தெரிவித்தார்.

ருஹைலை காதலிப்பதால் சுனைனாவை ரோஷன்கள் கொடுமைப்படுத்துகிறார்கள், அவர் என் தங்கை கங்கனாவுக்கு போன் செய்து உதவி கேட்டு தினமும் அழுகிறார் என்று ரங்கோலி ட்விட்டரில் தெரிவித்தார்.

ரங்கோலி

ரங்கோலி

கடந்த ஒரு மாதமாக சுனைனா கங்கனாவுக்கு தினமும் போன் செய்து பேசுகிறார். அவர் என்னிடமும் பேசினார். எப்பொழுதுமே அழுது கொண்டே இருக்கிறார். சுனைனா மீடியாவிடம் பேசியதில் இருந்து அவரின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. தன் குடும்பத்தார் தன்னை அடிப்பதுடன் மயக்க மருந்தும் கொடுப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை என்று கங்கனாவின் அக்கா ரங்கோலி தெரிவித்துள்ளார்.

சுனைனா

சுனைனா

நான் ஒரு முஸ்லீம் என்பதால் என்னை தீவிரவாதி என்று முத்திரை குத்துவது நியாயம் இல்லை என்று ருஹைல் அமின் தெரிவித்துள்ளார். என் மதத்தால் எங்களின் காதலுக்கு சுனைனா வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதை அறிந்து எனக்கு அதிர்ச்சியாக உள்ளது என்கிறார் ருஹைல். ருஹைல் அமின் ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள்

குழந்தைகள்

ருஹைல் அமினுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அதனால் தான் இந்த காதலுக்கு ரோஷன்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்றபடி மதம் அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ரித்திக் ரோஷன் கூட சூசன் கானை தான் திருமணம் செய்தார். அதை எதிர்க்காத ரோஷன்கள் சுனைனாவின் காதலை எதிர்க்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் உள்ளது என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

கங்கனா

கங்கனா

ரித்திக் ரோஷன், கங்கனா இடையே தனிப் பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கிறது. ரித்திக் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கங்கனா தெரிவித்தார். அதை ரித்திக் மறுத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது ஆதரவு கங்கனாவுக்கே என்று சுனைனா ரோஷன் தெரிவித்துள்ளார். சுனைனா இப்படி பேசியது ரோஷன்களுக்கு பிடிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X