சுந்தர்.சி.,க்கு கொரோனா...மருத்துவமனையில் அனுமதி...தகவலை பகிர்ந்த குஷ்பு

சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை சராசரியாக 1.30 லட்சத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமீர் கான், மாதவன், சூர்யா, அக்ஷய் குமார், நிவேதா தாமஸ், ஐஸ்வர்ய லட்சுமி, ரன்பிர் கபூர், ஆலியா பட், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுந்தர்.சி.,க்கு கொரோனா

சுந்தர்.சி.,க்கு கொரோனா

இந்நிலையில் டைரக்டரும், நடிகருமான சுந்தர்.சி.,க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பு சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். குஷ்பு தனது பதிவில், எனது கணவர் சுந்தர்.சி.,க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நலமுடன் உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உஷார்படுத்திய குஷ்பு

உஷார்படுத்திய குஷ்பு

அவருடன் எனது உறவினர் நித்தி ஷா மற்றும் அவரது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உடனடியாக உங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சுந்தர்.சி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

சுந்தர்.சி.,யில் திரை பயணம்

சுந்தர்.சி.,யில் திரை பயணம்

1995 ம் ஆண்டு முறை மாமன் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அந்த படத்தை இயக்கி போது அதில் ஹீரோயினாக நடித்த குஷ்புவிற்கும், சுந்தர்.சி.,க்கும் காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2000 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை சுந்தர்.சி இயக்கி உள்ளார்.

நகைச்சுவை ஹிட் பட டைரக்டர்

நகைச்சுவை ஹிட் பட டைரக்டர்

அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம், மேட்டுக்குடி, வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல நகைச்சுவை, ஹிட் படங்களை இயக்கி உள்ளார். மாநகரம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான சுந்தர்.சி, அரண்மனை, சண்டை, ஐந்தாம் படை, குரு சிஷ்யன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளரான தனது மனைவி குஷ்புவிற்காக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார் சுந்தர்.சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X