ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், தயாரிப்பாளர்.. குஷ்பு, சுந்தர். சி சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

சென்னை: மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி-யின் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவருக்கும் அவரது மனைவி குஷ்புவுக்கும் உள்ள சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு, தற்போது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.

நடிகை குஷ்பு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆவ்னி சினிமாஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இயக்குநராகவும் ஹீரோவாகவும் சுந்தர். சியும் பல வருடங்களாக சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களையும் இயக்கியுள்ளார்.

Sundar C and Khushbu Sundar Net Worth details revealed after their nomination
Photo Credit:

நயன்தாராவை வைத்து வேல்ஸ் நிறுவன பேனரில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை 100 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். மேலும், விஷால், தமன்னா நடிக்கும் புருஷன் படத்தையும் எடுத்து முடித்துள்ளார். இந்நிலையில், இருவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியலில் சுந்தர். சி: மூக்குத்தி அம்மன் 2 மற்றும் புருஷன் படங்கள் என பிசியாக இருந்த சுந்தர். சி திடீரென பார்ட் டைம் அரசியல்வாதியாக அதுவும் தேர்தல் தேதி அறிவித்ததும் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட முடிவு செய்துள்ளார். பாஜக சார்பில் குஷ்புவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இத்தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏ.சி. சண்முகம் தயாரிக்கும் படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி-யின் இந்த அறிவிப்பு புதிய தமிழகம் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை உருவாக்கியது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் மதுரை வந்த சுந்தர்.சி, உடனடியாக அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளைச் சந்தித்தார். தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிய அவர், இன்று மனைவி குஷ்பு மற்றும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

குஷ்பு, சுந்தர். சி சொத்து விவரம்: வேட்புமனுவின்படி, குஷ்புவிடம் ரூ.4.80 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி, ரூ.33 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் ஆகியவை உள்ளன. இவரது மொத்த அசையும் சொத்துகள் ரூ.6 கோடியாகவும், அசையா சொத்துகள் ரூ.4.17 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளன.

சுந்தர்.சி வசம் 220 கிராம் தங்கம் உள்ளது. ரூ.28 லட்சம் மதிப்பிலான டொயோட்டா கார், ரூ.12.80 லட்சம் மதிப்புடைய கியா சோனட் மற்றும் ஒரு கார்னிவல் கார் உட்பட இவரது மொத்த அசையும் சொத்துகள் ரூ.2.97 கோடியாகும். அவரது அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.17.7 கோடியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X