15 வருடத்துக்கு பிறகு இணையும் காம்போ.. மீண்டும் வடிவேலு - சந்தர். சி கூட்டணி.. சிரிப்பு வெடி ரெடி

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் சுந்தர்.சியுடன் அவர் மீண்டும் இணையவிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

vadivelu sundar c gangers

ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.

வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: ஒருவழியாக பஞ்சாயத்துக்கள் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என வரிசையாக நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக வடிவேலுவின் பிறந்தநாளான இன்று புதிய படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஹிட் கூட்டணி: அதாவது வடிவேலு எத்தனையோ இயக்குநர்களுடன் கூட்டணி போட்டு காமெடியில் கலக்கியிருக்கிறார். அப்படி ஒரு ஹிட் கூட்டணிதான் வடிவேலு - சுந்தர்.சி கூட்டணி. சுந்தர்.சி இயக்கத்தில் கிரி, வின்னர், நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். அதேபோல் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த தலைநகரம் படத்திலும் இருவரின் காம்போ பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

இந்நிலையில் மீண்டும் சுந்தர் சியும், வடிவேலுவும் இணைகிறார்கள். கேங்கர்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கிறார் இதில் கேங்கர்ஸ் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. ஏற்கனவே சுந்தர்.சி படங்களில் வடிவேலு ஏற்றிருந்த வீரபாகு, கைப்புள்ள போன்ற கதாபாத்திரங்கள் இன்றுவரை சிரிக்க வைத்திருக்கின்றன. அதேபோல் இந்தக் கதாபாத்திரமும் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X