Madha gaja Raja: லேட்டா வந்தாலும் சிக்ஸர் அடிக்கும் மதகஜராஜா.. 12 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் மதகஜராஜா படத்தில், விஷால், சந்தானம், வரலட்சுமி,அஞ்சலி, மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். இப்படம் இன்றோடு 13 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் இத்திரைப்படம் வசூல் செய்து இருக்கும் மொத்த தொகை எவ்வளவு என்று பார்க்கலாம்.
மதகஜராஜா படத்தின் படப்பிடிப்பு 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013ம் ஆண்டு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாகவில்லை. இதையடுத்து, 12 வருடங்களுக்கு பின் இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் வெளியானது. படம் எடுத்து 12 வருடம் ஆகிவிட்டதால் தற்போது ஆடியன்சுக்கு கதை பிடிக்குமா, படம் தியேட்டரில் ஓடுமா என்றெல்லாம் பேச்சு எழுந்தது. ஆனால், படத்தில் இருந்த காமெடி மீது சுந்தர் சிக்கு இருந்த நம்பிக்கையால் பல கட்ட முயற்சிக்கு பிறகு படத்தை வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

சூப்பர் சந்தானம்: படம் முழுக்க காமெடியாக இருக்க வேண்டும் என்று படத்தின் கதையும் அப்படியே கொண்டு சென்று இருக்கிறார்.விஷால் தன்னுடைய 3 நண்பர்கள் சந்தானம், சடகோப்பன் ரமேஷ், நிதின் சத்யாவுடன் பள்ளி வாத்தியார் மகள் திருமணத்திற்கு செல்கின்றனர். அப்போது,சந்தானம் தன் மனைவியுடன் சந்தோஷமாக இல்லை, அவர் மனைவியை விரைவில் விவாகரத்து செய்யப்போவது தெரிகிறது. இதனால், விஷால் சந்தானத்தை மனைவியுடன் சேர்த்துவைக்க பிளான் போடுகிறார். அதே சமயம், சடகோப்பன் ரமேஷ், நிதின் சத்யா இருவருமே அதிகாரம் படைத்த மீடியா தொழில் அதிபரான சோனுசூட்-ஆல் பாதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டு. தனது நண்பர்களுக்காக சோனு சூட்-யை எதிர்க்க விஷால் கிளம்புகிறார். கடைசியில் விஷால் தன் நண்பர்கள் பிரச்சனையை மீட்டாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
முதல் நாள் வசூல்: இப்படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருந்தாலும், இது பழைய படம் போல இல்லாமல் நல்ல நகைச்சுவை திரைப்படமாக இருக்கு என்கின்றனர். மேலும், சந்தானம் தற்போது ஹீரோவாகி விட்டதால், அவரது காமெடியை ரசிகர்கள் நாங்கள் பார்க்க முடியாமல் போனது. ஆனால், இந்த திரைப்படத்தில் பழைய சந்தானத்தை பார்க்க முடிந்தது. படத்தை பார்த்து சிரித்து சிரித்தே வயிறு வலி வந்துவிட்டது என்றனர்.
படத்தின் மொத்த வசூல்: இப்படம், முதல் இரண்டு நாட்களில் ரூ.3 கோடியை வசூலித்தது. அதன் பிறகு படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்ததால், பொங்கல் பண்டிகைக்கு படத்தின் அப்படியே டபுளாகி ரூ6 கோடியாகி தொடர்ந்து படம் வசூலை அள்ளிவந்தது. இந்த வாரமும் பெரிதாக எந்த படமும் வெளியாகாததால், மதகஜராஜா படத்தின் குறையவே இல்லை, நேற்று வேலை தினமாக இருந்தாலும் படத்தின் வசூல் ஒரு கோடியாக இருந்தது. ஆக மொத்தம் மதகஜராஜா படம் 12 நாட்களில் 40.92 கோடியை வசூலித்துள்ளது. மேலும், வார விடுமுறை தினம் வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுக்கு பின் வெளியான ஒரு படம் வசூலை அள்ளுவது இதுவே முதன்முறையாகும்.


Click it and Unblock the Notifications











