Madha Gaja Raja Public Review: சொல்லி அடித்த சுந்தர் சி.. மத கஜ ராஜா சூப்பர்.. ரசிகர்கள் விமர்சனம்!
சென்னை: 2013ஆம் ஆண்டு வெளியாக இருந்த மத கஜ ராஜா திரைப்படம் பல பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தியேட்டரில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து விமர்சனத்தை கூறியுள்ளனர்.
படம் பார்த்த ரசிகர் ஒருவர், மத கஜ ராஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது. 12 வருடமாக இந்த படம் ஏன் வெளியாகவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த படத்தில் நிறைய மெசேஜ்களை சொல்லி இருக்கிறார் சுந்தர் சி. சந்தானத்தை பழைய காமெடியான இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஏன் ஹீரோவானார், அவர் காமெடியனாகவே நடித்து இருக்கலாமே என்று நினைக்க தோன்றியது. 12 வருட பழைய படம் என்று படம் பார்க்கும்போது தோன்றவே இல்லை, ஸ்கிரீன் ப்ளே, காமெடி, பாட்டு என அனைத்தும் சூப்பராக இருக்கிறது. விஜய் ஆண்டனியின் இசை அஞ்சலி, வரலட்சுமி, சந்தானத்தின் நடிப்பு என அனைத்துமே சூப்பராகவே இருக்கிறது. பழைய படம் என்ற எண்ணமே வரவில்லை.

விஷாலுக்கு 200 தரலாம்: படம் பார்த்த மற்றொருவர், ரொம்ப நாள் கழித்து இப்படி ஒரு காமெடி படத்தை திரையில் பார்த்தது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. சுந்தர் சி, விஷால் இருவரின் காம்பினேஷன் சூப்பராகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் நடித்ததற்காகவே விஷால் அவர்களுக்கு 200 கோடி கொடுத்தாலும் தகும். அந்த அளவுக்கு சூப்பராக நடித்திருக்கிறார். சந்தானம் காமெடியில் பிச்சு உதறி இருக்கிறார். அவரின் காமெடியை பார்த்து சிரித்து வயிறே வலித்து விட்டது என்றார்.
இதுதான் பொங்கல் பெஸ்ட் படம்: படம் சூப்பராக இருக்கிறது குறிப்பாக சந்தானத்தின் காமெடி அருமையாக இருக்கிறது அவர் மட்டும் ஹீரோவாகாமல், காமெடியனாகவே இருந்திருந்தால் நகைச்சுவையில் எங்கோ சென்று பார். வாழ்க்கையில மிகப்பெரிய பிரச்சனை இருப்பவர்கள் இந்த திரைப்படத்தை பார்த்தால் போதும் அனைத்து பிரச்சினைகளையும் மறந்து விடுவார்கள். அந்த அளவிற்கு படத்தில் காமெடி இருக்கிறது. பொங்களுக்கு வந்த படங்களிலேயே இந்த திரைப்படம் தான் பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.
காமெடியன் சந்தானம் வேண்டும்: மதகஜராஜா படம் நல்லா இருக்கு, கதை, லாஜிக் எல்லாம் பார்க்காமல் சும்மா ஜாலியாக வந்தோம் ஒரு படத்தை பார்த்துவிட்டு சென்றோம் என்று நினைத்தால் இந்த படம் சூப்பரான படம். படத்தை பார்த்து ஜாலியாக சிரிக்கலாம். சந்தானத்தின் காமெடி, விஷால் நடிப்பு என அனைத்தும் நன்றாக இருக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படம் கலகலப்பாக இருக்கிறது. எங்களுக்கு ஹீரோ சந்தானம் வேண்டாம், காமெடியன் சந்தானம் தான் வேணும். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தாவது, சந்தானம் மீண்டும் காமெடியான நடிக்க வேண்டும் என்றார்..


Click it and Unblock the Notifications











