ஆத்தாடி.. தமன்னாவின் ‘புருஷன்‘ விஷாலா.. இது லிஸ்ட்லயே இல்லையே.. அட்டகாசமாக வெளியான டைட்டில் ப்ரோமோ!

சென்னை: ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணி புது படத்தில் கமிட்டாகி உள்ளனர். இப்படத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா, சினேகா, ரெஜினா கேசண்ட்ராட் , ஊர்வசி , அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
சுந்தர் சி இயக்கி உள்ள இப்படத்தின் பூஜை மார்ச் மாதம் தடபுடலாக கோவில் போல செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேர்ஷனல் உடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
முக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அநேகமாக மூக்குத்தி அம்மன் 2 கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sundar C Vishal Title Promo

அட்டகாசமான தலைப்பு: மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது சுந்தர் சி, தனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர் சி, விஷால் மீண்டும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளனர். இப்படத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடிக்க ஹிப்பாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். அப்படத்தின் டைட்டில் ப்ரோமோ குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், விஷால், சாதுவான கணவனாக வீடு துடைப்பது, துணி துவைக்கும் வேலைகளை செய்கிறார். விஷாலின் மனைவி தமன்னா, தனது பக்கத்து வீட்டில் இருக்கும் பெரிய ஸ்டார் நடிகரான யோகி பாபுவிடம் என் கணவர், ரொம்ப சாது என சொல்லிக்கொண்டு இருக்க, விஷால் சமையல் அறையில் தமன்னாவிற்கு தெரியாமல் ரௌடிகளை அடித்து சம்பவம் செய்கிறார். இந்த படத்திற்கு 'புருஷன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்புக்கு ஏற்றபடி டைட்டில் ப்ரோமோவில் சுந்தர் சி சம்பவம் செய்துவிட்டார். இந்த டைட்டில் ப்ரோமோவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X