ரம் பம் பம் ரீமிக்ஸ் பாடலும், காஃபி வித் காதலும்..சுந்தர்.சி, யுவன், இளையராஜா டச் சுவாரசியம்

சென்னை: அரண்மனை 3 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.C இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் "Coffee with Kadhal". சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்திலிருந்து ஒரு சிங்கிள் வெளியாகியுள்ளது.

Recommended Video

South India-வை சேர்ந்தவர்களுக்கு Rajya Sabha பதவி... BJP போடும் திட்டம் ? *Politics

நடிகர்கள் ஶ்ரீகாந்த், ஜீவா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியான ரம் பம் பம் ரீமிக்ஸ் பாடலில் படத்தினுடைய கலகலப்பான மேக்கிங் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

அவ்னி சினிமாக்ஸ் சார்பாக நடிகை குஷ்புவும், பென்ஸ் மீடியா சார்பாக தயாரிப்பாளர் அருண் குமார் அவர்களும் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். யுவனின் "U1Records" இந்தப் பாடலை வெளியிட்டுள்ளது.

யுவனும் தொடரும் ரீமிக்ஸும்

யுவனும் தொடரும் ரீமிக்ஸும்

டிக்கிலோனா திரைப்படத்தில் "பேர் வச்சாலும் வைக்காம போகாது மல்லி வாசம்" பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, அது இந்தத் தலைமுறை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் அந்த பாடல் இடம் பெற்றிருந்த அதே "மைக்கேல் மதன காமராஜன்" திரைப்படத்தில் வரக்கூடிய இன்னொரு பாடலான "ரம் பம் பம் ஆரம்பம்" பாடலும் தற்சமயம் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினலை பாதிக்காத வகையில் இந்தப் பாடலையும் யுவன் சங்கர் ராஜா தான் ரீமிக்ஸ் செய்துள்ளார்

ரம் பம் பம் பற்றிய சுவாரஸ்யம்

ரம் பம் பம் பற்றிய சுவாரஸ்யம்

மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ஜானரில் இசையமைத்து, இளையராஜா அந்த ஆல்பத்தை ஹிட் ஆக்கி கொடுத்திருப்பார். அந்த வகையில் ராக் அண்ட் ரோல் என்ற ஜானரில் உருவாக்கப்பட்ட பாடல் தான் ரம்பம்பம் ஆரம்பம். நடிகர் கமல்ஹாசன் மற்றும் குஷ்பு இந்த பாடலுக்கு அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்கள்.

சுந்தர்.C - கூட்டணி

சுந்தர்.C - கூட்டணி

இயக்குநர் சுந்தர் சி மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இதற்கு முன்பு உனக்காக எல்லாம் உனக்காக மற்றும் வின்னர் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர். தற்சமயம் மூன்றாவது முறையாக காஃபி வித் காதல் திரைப்படம் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் பாடலின் ஒரிஜினல் பதிப்பில் நடித்திருந்த குஷ்பு இந்த படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் பட்டாளம்

நடிகர் பட்டாளம்

நடிகர்கள் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூவரும் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் இந்தப் படத்தில் அவர்களுக்கு ஒரே தங்கையாக நடிப்பவர் தொகுப்பாளனி திவ்ய தர்ஷினி. வழக்கம் போல இந்த படமும் சுந்தர் சி பாணியில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இவர்களை தவிர்த்து நடிகர்கள் யோகி பாபு, கின்ஸ்லின், நடிகைகள் ரைசா வில்சன், சம்யுக்தா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஆட்டம் போட வேண்டும்

ஆட்டம் போட வேண்டும்

ரம் பம் பம் ரீமிக்ஸ் பாடலும், காஃபி வித் காதலும் என்று சுந்தர்.C வித் யுவன் காம்போ பல இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து யூட்யூபில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. நல்ல பெப்பியான பாடல் ரம் பம் பம். இந்த பாடலை யார் எப்போது கேட்டாலும் ஒரு ஆட்டம் போட வேண்டும் என்று எண்ணம் வரும். அப்படி பட்ட இந்த பாட்டை யுவன் தேர்ந்து எடுத்து மீண்டும் ரசிகர்களை ஆட வெச்சது இளைஞர்களுக்கும் சந்தோசம்.90'ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X