''ஆசையும், பேராசையும் கலந்த கரு'' சுந்தர் சியின் ஒன் டூ ஓன் டிரைலர் வெளியானது!
சென்னை: த்ரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய திருஞானத்தின் இரண்டாம் படம் தான் ஒன் டூ ஒன். இந்த படத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் கஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளக்கி வரும் சுந்தர்.சி கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை சுந்தர் சியிடம் உதவி இயக்குநராக இருந்த சுராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்த சுந்தர் சி. அரண்மனை படத்தை எடுத்து அதில் வெற்றி பெற்றார்.

அரண்மனை முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்த அடுத்தடுத்து பாகங்களை வெளியாகி வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் அரண்மனை நான்காம் பாகம் வெளியானது. இதில், தமன்னா, சுந்தர் சி,கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். முந்தைய படங்களைபோல நான்காம் பாகம் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த ஆண்டி 100 கோடி வசூலை தொட்டப்படத்தில் அரண்மனை திரைப்படம் இடம் பிடித்துள்ளது.
சுந்தர் சியின் ஒன் டூ ஒன் : தற்போது நடிகர் சுந்தர் சி நடித்துள்ள திரைப்படம் ஒன் டூ ஒன், இப்படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கி உள்ளார். இதில், சுந்தர் சி அனுராக் கஷ்யப், விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி மானஸ்வி ரியாஸ் கான் உள்ளிட்டவர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சித்தார்த் விபிம் இசையமைத்துள்ள இப்படத்தை 24 Hours ப்ரோடக்ஷ்ன் நிறுவன தயாரித்துள்ளது. எஸ்கே.ஏ பூபதி கார்த்திக், பிரவீம் நித்யானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம், சுந்தர் சி உருவாகும் இருபதாவது திரைப்படம் ஆகும்.
அனுராகு கஷ்யப்: பாலிவுட்டில் மாஸ் இயக்குநரான அனுராக் கஷ்யப் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக கருதப்படுகிறது. இவர் இதற்கு முன் இமைக்கா நொடிகள், லியோ, விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா படத்திலும் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அனுராக் கஷ்யப் ஒரு முரட்டு, சைக்கோ வில்லனாவே நடித்திருக்கிறார்.
டிரைலர் எப்படி இருக்கு: இந்நிலையில், ஒன் டூ ஒன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில், சுந்தர் சியின் குரலில் முயற்சி செய்யாதவனுக்கு தோல்விக்கூட கிடைக்காது. எனக்கு தோல்வியே கிடைச்சாலும் முயற்சி செய்யாமல் விடமாட்டேன் என்று பேசும் வசனத்துடன் டிரைலர் தொடங்குகிறது. இதையடுத்து, விஜய் சேதுபதியின் குரலில் ஒரு உசுரோட பசிக்கு இன்னோரு உசுர இரையா படைச்சவன்டா கடவுள், அவன்கிட்ட இன்னுமா கருணையை எதிர்பார்க்குறீங்க என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. அனுராக் காஷ்யபின் அட்டகாசமான வில்லத்தனம், நான் யாருனா... நான் ஆசையும், பேராசையும் கலந்த கரு.. என சொல்லுவது மாஸாக உள்ளது. மொத்தத்தில் இந்த ஒன் டூ ஒன் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











