படத்துல 3 ஹீரோயின்...இதுல இவங்கதான் பேயாமே? 'அரண்மனை 3' ராஜ்கோட் ஷூட்டிங் முடிகிறது

By

சென்னை: 'அரண்மனை 3' படத்தின் ராஜ்கோட் ஷூட்டிங் முடிந்துவிட்டது என படக்குழு தெரிவித்துள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை.

யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். பேய் படமான இது, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி.

ஆர்யா ஹீரோ

ஆர்யா ஹீரோ

இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் பேசப்பட்டது. படத்தை சுந்தர். சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இப்போது இயக்குகிறார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

ஹீரோயின்களாக, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிக்கின்றனர். இவர் தமிழில், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்தவர். மற்றும் விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் பேய் படம் இது. முந்தைய பாகத்துக்கும் மூன்றாம் பாகத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது என்று படக்குழுத் தெரிவித்திருந்தது.

ராஜ்கோட்

ராஜ்கோட்

இதில் நடிப்பது பற்றி நடிகை ராஷி கண்ணா கூறும்போது, 'அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களை பார்த்திருக்கிறேன். இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியது.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அங்கு 25 நாட்களாக நடக்கும் படப்பிடிப்பு நாளையுடம் முடிவடைகிறது. நாளை மறுநாள் படக்குழு சென்னைத் திரும்புகிறது. அடுத்த ஷெட்யூல், சென்னை அல்லது ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்திலும் ஆண்ட்ரியா, பேய் பிடித்தவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்துக்கு சத்யா இசை அமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X