இதுல வடநாட்டுப் பேயா இருக்குமோ? குஜராத்தில் தொடங்கியது சுந்தர்.சியின் 'அரண்மனை 3' பட ஷூட்டிங்

By

சென்னை: 'அரண்மனை பட முன்றாம் பாகத்தின் ஷூட்டிங் குஜராத்தில் தொடங்கியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை.

யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். பேய் படமான இது, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

ஆர்யா ஹீரோ

ஆர்யா ஹீரோ

இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் பேசப்பட்டது. இதை சுந்தர். சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இயக்குகிறார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார்.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

ஹீரோயின்களாக, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிக்கின்றனர். இவர் தமிழில், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்தவர். மற்றும் விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் பேய் படம் இது. முந்தைய பாகத்துக்கும் மூன்றாம் பாகத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது என்று படக்குழுத் தெரிவித்திருந்தது.

ஆர்வமாக

ஆர்வமாக

இதில் நடிப்பது பற்றி நடிகை ராஷி கண்ணா கூறும்போது, 'அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களை பார்த்திருக்கிறேன். இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என்று கூறியிருந்தார்.

ராஜ்கோட்டில்

ராஜ்கோட்டில்

இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியுள்ளது. இதில் ஆர்யா கலந்து கொண்டுள்ளார். அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு சத்யா இசை அமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது சுந்தர்.சியே தயாரிக்கிறார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X