அரண்மனை 4 கொடுத்த தைரியம்.. அரண்மனை 5ம் பாகத்துக்கு தயாரான இயக்குநர் சுந்தர் சி!
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு 100க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 5ம் பாகம் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் தமிழ் படங்கள் பெரிதாக எந்த படமும் ஓடாத நிலையில், கோலிவுட்டின் மானத்தை காப்பாற்றும் வகையில் மேமாதம் சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நகைச்சுவை, திரில்லர் பாணியில் உருவான அரண்மனை 4 படம் முதல் நாட்களில் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அரண்மனை: குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தமன்னா, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் கணவர் மர்மமான முறையில் இறந்துவிட, தமன்னா தற்கொலை செய்து கொள்கிறார். இந்த தகவல் தெரிந்து தங்கையின் அரண்மனைக்கு வரும் சுந்தர் சிக்கு தன் தங்கை மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிறான். மேலும், ஒரு தீய சக்தி தங்கையின் மகளை பழி கொடுக்க இருப்பதை தெரிந்து கொண்ட சுந்தர் சி, அந்த தீய சக்தியிடம் இருந்து குழந்தையை காப்பாற்றுகிறார்.
அரண்மனை 5: இந்நிலையில், அரண்மனை 5 படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் கடைசியில் அல்லது டிசம்பரில் தொடங்க இருப்பதாகவும், கோடை விடுமுறையில் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு பாகமும் வெற்றி: அரண்மனை படத்தின் முதல் படம் 2014ம்ஆண்டு வெளியானது. அதில், சுந்தர், ஹன்சிகா மோத்வானி, வினய் ராய் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் 2016ம் ஆண்டு வெளியானது. இதில், சித்தார்த், த்ரிஷாவுடன் சுந்தர் மற்றும் ஹன்சிகா நடித்திருந்தனர். 2021 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை மூன்றாவது பாகத்தில் சுந்தர், ஆர்யா, ராஷி மற்றும் ஆண்ட்ரியா நடித்திருந்தனர். இந்த நான்கு படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வித்தியாசமாக இருந்தது.


Click it and Unblock the Notifications











