மதுரையில் பிரசாரத்தை தொடங்கிய சுந்தர் C.. அரசனை நம்பி புருஷனை கை விட்டுட்டாரா? கலாய்க்கும் ரசிகர்கள்
மதுரை: தமிழ்நாடு தேர்தல் என்றாலே அதில் சினிமா பிரபலங்களின் தாக்கம் இல்லாத அரசியலைப் பார்ப்பது மிகவும் சிரமம். ஆனால் இம்முறை பலருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் அரசியலில் களமிறங்கி உள்ளார் இயக்குநர் சுந்தர் சி. இவர் அதிமுக - பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் போட்டி இடுகிறார். இந்த தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இதற்கிடையில் சுந்தர் சி தனது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் சுந்தர் சி. ஜனரஞ்சகமான படம் என்றால் அதற்கு கண்ணை மூடிக் கொண்டு இயக்குநர் சுந்தர் சி படத்தை பார்க்கலாம் என்று கூறும் அளவுக்கு அவர் ஒரு டிரேட்மார்க். அவரது மனைவி குஷ்பு அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இம்முறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் கப்சிப் என அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் சுந்தர் சி.

இவர் புதிய நீதிக் கட்சி சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இரட்டை இலைச் சின்னத்தில் மதுரை மத்தியில் போட்டியிடுகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இந்த தகவல் அரசியல் தளத்தில் கசியாமல் இருந்ததே பலருக்கும் ஷாக்.
மதுரை மத்தி: தனது பெயர் அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, சுந்தர் சி பிரச்சாரத்தை மதுரை மத்தி தொகுதியில் தொடங்கிவிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறாகள். இந்த தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார். இந்த தொகுதி என்றாலே பழனிவேல் தியாகராஜன் தான் செல்வாக்கு மிக்க நபர் என்றாலும், திமுக மீது தற்போது உள்ள அதிருப்தி சுந்தர் சி., க்கு சாதகமாக அமையலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.
புருஷன்: அதே நேரத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே உருவாகி முடிந்துள்ள மூக்குத்தி அம்மன் பாகம் 2 வெளியாகவுள்ளது. அதேபோல் விஷால், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் புருஷன் படம் உருவாகி வருகிறது. இதனால் இணையவாசிகள் சிலர் சுந்தர் சி அரசனை நம்பி புருஷனை கைவிட்டுட்டாரே என்று விமர்சித்தும் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











