அரண்மனை வெற்றியை ஆம்பள செட்டில் கேக் வெட்டிக் கொண்டாடிய விஷால், சுந்தர் சி, ஹன்சிகா
அரண்மனை படத்தின் பிரமாண்ட வெற்றியை, ஆம்பள படத்தின் செட்டில் கேக் வெட்டிக் கொண்டாடினர் இயக்குநர் சுந்தர் சி, விஷால், ஹன்சிகா மற்றும் குழுவினர்.
ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய், ராய் லட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று வெளியான படம் அரண்மனை. இந்தப் படம் வெளியான நாளில் முதல் ஷோ சுமாராகத்தான் போனது.

ஆனால் அடுத்த காட்சியிலிருந்து கூட்டம் அலைமோத, இரவுக் காட்சி கூட ஹவுஸ் புல் எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று முதல் கூடுதல் அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

படத்தின் இந்த வெற்றியை இயக்குநர் சுந்தர் சி, தான் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஆம்பள படத்தின் செட்டில் கொண்டாடினார்.

ஒரு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு, அதை விஷால், ஹன்சிகா உள்ளிட்டோர் முன்னிலையில் வெட்டிக் கொண்டாடினார் சுந்தர் சி.
Comments


Click it and Unblock the Notifications