அரண்மனை 4 படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? தியேட்டரே சும்மா அலறப்போகுது!

சென்னை: சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை. இதில், ஹன்சிகாவை வில்லன் கொன்றுவிட பழிவாங்க துடிக்கும் ஆவி, ஆன்ட்ரியாவின் உடலுக்குள் சென்று ஆட்டிப்படைக்கிறது. இந்த படம் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து 2016ம் ஆண்டு அரண்மனை இரண்டாம் பாகம் வெளியானது. இதில், சித்தார்த், த்ரிஷா, கோவை சரளா, சூரி என பலர் நடித்திருந்தார்கள்.

sundar c Direction aranmanai 4 movie release date update

அரண்மனை: இந்த படமும் வெற்றி பெற்றதால், 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. அதில், ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள் இந்த படம் சுமாராகத்தான் ஓடியது. மூன்றாம் பாகத்திலும், அதே அரண்மனை பேய், சுந்தர் சி காப்பாற்றுவது போல கதை இருந்ததால், மூன்றாம் பாகம் மக்கள் மனதில் நிற்காமல் தோல்விப்படமாக அமைந்தது.

அரண்மனை 4: அரண்மனை மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதும், சுந்தர் சி அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. படத்தில், சுந்தர்.சியின் தங்கையான தமன்னாவின் மரணத்துக்கு நீதி தேடும் வழக்கறிஞராக சுந்தர் சி நடித்துள்ளார்.

ரிலீஸ் தேதி: இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி அரண்மனை 4 படம் வருகிற 26-ந் தேதி வெளியாக உள்ளது. இத்துடன் இப்படத்தின் முதல் பாடலான, அச்சச்சோ என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் தமன்னாவும் ராஷிகண்ணாவும் மிக கவர்ச்சியாக நடனமாடி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X