twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு!

    |

    சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களமே பரபரப்புடன் காணப்படுகிறது. ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சியில் இணைபவர்கள் எண்ணிக்கை தான் அதிகரித்து வருகிறது என்றால், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    மற்ற எந்த தேர்தல்களை விடவும் இந்த முறை தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். கமல், சரத்குமார், குஷ்பு, உதயநிதி ஸ்டாலின், கருணாஸ், பிரியதர்ஷினி விமல், ரவி மரியா, ராதிகா சரத்குமார் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

    தமிழக அரசியலில் லேட்டஸ்ட் வரவு

    தமிழக அரசியலில் லேட்டஸ்ட் வரவு

    இதில் லேட்டஸ்ட் வரவாக முன்னணி டைரக்டரும் குஷ்புவின் கணவருமான சுந்தர்.சி இன்று திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசி உள்ளார். இந்த திடீர் சந்திப்பிற்கு காரணம், சுந்தர்.சி பாஜக.,வில் இணைய உள்ளது தான் என தகவல் பரவி உள்ளது.

    பாஜக.,வில் இணைந்த குஷ்பு

    பாஜக.,வில் இணைந்த குஷ்பு

    சுந்தர்.சியின் மனைவி குஷ்பு சில ஆண்டுகளுக்கு முன் திமுக.,வில் இணைந்தார். பிறகு அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பல ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த குஷ்பு, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்தார்.

    சுந்தர்.சி.,யும் இணைகிறாரா

    சுந்தர்.சி.,யும் இணைகிறாரா

    பாஜக.,வில் தேசிய அளவிலான செய்தி தொடர்பாளராக அவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் குஷ்பு, பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுந்தர்.சியும் பாஜக.,வில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    அடுத்த அரசியல் ஜோடியா

    அடுத்த அரசியல் ஜோடியா

    ஆனால் சுந்தர்.சி, பாஜக.,வில் இணைய உள்ளது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் சரத்குமாருக்கு துணையாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் அரசியலில் களமிறங்கியதை போன்று, மனைவி குஷ்புவிற்கு துணையாக சுந்தர்.சியும் அரசியலில் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் பலர் வர வாய்ப்பு

    மேலும் பலர் வர வாய்ப்பு

    சின்னத்திரை நடிகர்கள் முதல், பெரிய திரையில் பிரபலமான நடிகர்கள், டைரக்டர்கள் என பலரும் இந்த முறை தேர்தலில் களம் காண தயாராகி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருப்பதால் மேலும் பலர் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    director Sundar C today met the BJP Tamil Nadu leader L. Murugan which has sparked speculation that he is also joining the party.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X