விஜய்யை விடுங்க.. தேர்தலில் களமிறங்கும் சுந்தர்.சி.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. திமுக பல கட்சிகளுடனும், அதிமுக சில கட்சிகளுடனும், தவெக தனித்தும் இந்தத் தேர்தலை சந்திக்கவிருக்கின்றன. விஜய்யை பொறுத்தவரை திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு; அன்றிலிருந்தே பிரசாரத்தையும் தொடங்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. அவர் பெரம்பூரில் போட்டியிடவிருக்கிறார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக இயக்குநர் சுந்தர்.சியும் இந்தத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. வாக்குப்பதிவுக்கு சரியாக இன்னும் 24 நாட்களே இருக்கின்றன. இந்த முறை நடிகர் விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து களமிறங்குகிறார். அதன் காரணமாக இத்தேர்தல் கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது. முதலில் என்டிஏ கூட்டணிக்குத்தான் விஜய் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக் நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை; மக்களுடன் மட்டும்தான் கூட்டணி என சொல்லி தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

Sundar C Enters Tamil Nadu Elections Set to Contest as Vijay Begins Campaign
Photo Credit:

எப்போது பிரசாரம்?: அவர் இன்று நான்கு தொகுதிகளில் பரப்புரை செய்ய அனுமதி கோரியிருந்தார். ஆனால் ஒரு தொகுதியில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே நான்கு தொகுதி பரப்புரையையும் அவர் ஒத்து வைத்துவிட்டார். அநேகமாக திங்கட்கிழமை பெரம்பூரில் தான் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு; அன்றைய தினம் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்குவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிச்சயம் இந்தத் தேர்தலில் எப்படியாவது தாக்கத்தை செலுத்திட வேண்டுமென்பதில் முழு முனைப்பாக இருக்கிறார்கள் தவெக.

விட்டுக்கொடுக்காத திமுக, அதிமுக: இந்தப் பக்கம் திமுகவும், அதிமுகவும் கடுமையான போட்டியில் இருக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளுடனும், 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக; விசிக, தேமுதிக என பல கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கின்றன. அந்தக் கட்சிகள் தங்கள் கூட்டணிகளுக்கான தொகுதி பங்கீடையும் இழுபறிக்கு பிறகு முடித்துவிட்டார்கள். அதிமுக வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. அநேகமாக திமுக இன்று அல்லது நாளை வேட்பாளர்களை அறிவிக்கும் என தெரிகிறது.

தேர்தலில் சுந்தர்.சி: அனைவரது கவனமும் இந்தத் தேர்தலில் விஜய் மீது இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீர் சர்ப்ரைஸாக அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. அதன்படி இயக்குநரும், நடிகரும், குஷ்பூவின் கணவருமான சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கவிருக்கிறார். இந்தத் தொகுதி அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடவிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி போல் இவரும் அரசியலில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சுந்தர்.சியின் கரியர்: முன்னதாக, தமிழ் சினிமாவில் சுந்தர்.சி முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். கடந்த 30 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் அவர் இப்போதும் ஹிட் படங்களை கொடுக்கிறார். கடந்த வருடம் வெளியான அவரது மதகஜராஜா மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்குவதாக இருந்தார். ஆனால் விலகிவிட்டார். அடுத்ததாக விஷால், தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து புருஷன் என்ற படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X