கூட்டம் கூட்டமாக ஆர்ட்டிஸ்ட் இருப்பார்கள் என்பது உண்மை தான் ஆனால் ஆக்சன் வேற லெவல்

சென்னை: இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம் இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? என்று கேட்டார்கள் .

இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன். எதுதான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்? என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன்.
இதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப்பாளர் ரவிசந்திரன் மாதிரி அமைவது வரம். நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் தான் ஒரு நல்ல இயக்குனர் தன் கனவுகளை சரியாக கொண்டுசெல்ல முடியும்.

sundar c has taken the movie action in new dimensions.

சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார். இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பார்களா? என்று சந்தேகம்தான். அப்படி ஒரு டெடிகேஷன் . பாஹுபலி தமன்னாவுக்கு ஒரு நோட் வர்தியான படம் அதுபோலே ஆக்ஷன் படமும் அவர்களுது கேரியரில் இருக்கும்.

அக்கன்ஷாவும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா மாதிரிதான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள். சில நேரங்களில் அகன்ஷா நிஜமாவெய் நிறைய அடி வாங்கிவிட்டு சிரித்த முகத்துடன் அதை தாங்கிக்கொண்டார்.

sundar c has taken the movie action in new dimensions.

ஐஸ்வர்யா லக்ஷமி இப்படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்த எல்லா படம்மும் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் அவருக்கு இது முதல் படம். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்., ஐஸ்வர்யா லட்சுமி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் எல்லா முன்னணி ஹீரோஸுடன் ஒரு படம் பண்ணுவாங்க என்ற நம்பிக்கை இருக்கிறது.

சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரத்தைக் கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார். சாயாவின் கண்கள் அவ்வளவு அழகு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக அவ்வளவு மெனகெடுவார்கள். தமிழ் சினிமா சாயா சிங் போன்ற நடிகைகளை நல்லா பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற அன்பறிவு இருவரும் தான். தேசிய விருது பெட்ர உன்னதமான கலைஞர்கள். அவர்களது உழைப்பு பற்றி சொல்ல வார்த்தைகள் பத்தாது.

sundar c has taken the movie action in new dimensions.
ஹிப்ஹாப் ஆதி பற்றி நிறைய சொல்ல வேண்டும் என்று சிரித்துவிட்டு ,முதலில் நான் ஆதிக்கு கொடுக்க கூடாது என்றிருந்தேன். ஆனால், என்னிடமிருந்து வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். உரிமையுடன் நட்புடன் கேட்டு பெற்றுக்கொண்டார்.

நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி.
மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

தமன்னாவை எனக்கு பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இப்படத்தில்தான் நிறைவேறியது. 'பாகுபலி' படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர் தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன்.

இப்படத்தின் CG பணி செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா? என்ற அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.
மேலும், விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது.

எனது படங்களில் கண்டிப்பாக மினிமம் காரண்டீ- ஆடியன்ஸுக்கு நான் கொடுத்து சந்தோஷ படுத்த நினைப்பேன் ஆனால் இந்த படத்தில் மாக்ஸிமும் காரண்டீ இருக்கு. கண்டிப்பாக கமர்சியல் எலிமெண்ட்ஸ் நிறைய இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X