Thalaivar 173: எல்லாத்துக்கும் காரணம் குஷ்புவா?.. சுந்தர் C-க்கு அருமை தெரியல.. விளாசி விட்ட பிரபலம்
சென்னை: மொத்த தமிழ் சினிமாவும் கடந்த சில தினங்களாக பேசிக் கொண்டிருக்கும் விஷயம் தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் விலகியது தொடர்பாகத்தான். சுந்தர் சி விலகுகிறேன் என்று அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சுந்தர் சி என மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் தலைவர் 173 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இப்படி இருக்கையில் சில தினங்களுக்குள் என்ன பிரச்னை / மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக வலைப்பேச்சு பிஸ்மி அளித்துள்ள பேட்டி ஒன்றில், " ஜெயிலர் படம் வெளியான பின்னரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, அந்த படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக ஒரு படம் கமிட் செய்யப்பட்டது. மேலும் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. ஆனால், கூலி படம் சொதப்பியதால், லோகேஷ் கனகராஜை நீக்கினார் சூப்பர் ஸ்டார். இப்போது, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ரஜினியின் கால்ஷீட் இருப்பதால் உடனடியாக ஒரு இயக்குநரை கமிட் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

சுந்தர் சி: மேலும் ஒரு கலகலப்பான படம் பண்ண வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட, ரஜினி மற்றும் கமலின் தேர்வாக இருந்தவர் சுந்தர் சி. இதற்கு முன்னர் சுந்தர் சி கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தையும் ரஜினிகாந்த்தை வைத்து அருணாசலம் படத்தை இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களையும் இயக்கும்போது சுந்தர் சி பெரிய இயக்குநர் எல்லாம் இல்லை. அவருக்கான ரசிகர்கள் என்று பெரிய அளவில் இல்லை. வளர்ந்து வரும் இயக்குநர் அவர். அப்போது குஷ்புவுடன் அவர் காதலில் இருந்தார். குஷ்புவின் முயற்சியால் அருணாசலம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அருமை தெரியவில்லை: அதேபோல் இன்றைக்கு தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு என்பது ரஜினி, கமல் என இருவரும் எடுத்த முடிவால், இந்த வாய்ப்பும் அவருக்கு எளிதாக கிடைத்துள்ளது. இப்படி இருக்கையில்,, மொத்ததில் இந்த இரண்டு வாய்ப்புகளுக்காக சுந்தர் சி கஷ்டப்படவில்லை. பல இயக்குநர்கள் போராடி, கஷ்டப்பட்டு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். ஆனால் சுந்தர் சி-க்கு அப்படி இல்லை. இரண்டு வாய்ப்புகளும் அவருக்கு தானாக அமைந்தவை. இதனால் அவருக்கு அதன் அருமை தெரியவில்லை" என்று விளாசி விட்டுள்ளார். இதைக் கேட்ட பலரும் அன்றைக்கு மட்டும் குஷ்பு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு இப்படி நடந்திருக்காது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், சுந்தர் சி இவ்வளவு பெரிய படத்தில் இருந்து விலகுகிறார் என்றால் அவர் தரப்பிலும் நியாயம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











