ரஜினி ரசிகர்களுக்கு பேட்ட மாதிரி சிம்பு ரசிகர்களுக்கு #VRV
Recommended Video

சென்னை: சிம்புவுக்கு எது வருமோ அதை வைத்து படம் எடுத்துள்ளார் சுந்தர் சி.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிம்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கெத்து
சொத்து தான் என் கெத்து, அம்மாவுக்கு அப்புறம் நான் தான்னு பல பேர் நினைக்கிறாங்க என்று ட்ரெய்லரில் சிம்பு பன்ச் வசனங்கள் பேசியுள்ளார். இப்படி பன்ச் மேல் பன்ச் விடுவது தான் சிம்புவின் கெத்து என்பது சுந்தர் சி.க்கு நன்கு புரிந்துள்ளது.

அமைதி
அமைதியாக அடங்கிப் போய் நடிப்பது எல்லாம் சிம்புவுக்கு செட்டாகாது. அது அவரின் ரசிகர்களுக்கும் பிடிக்காது என்பதை புரிந்து கொண்டு படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. என்பது ட்ரெய்லர், பாடல்களை பார்த்தாலே தெரிகிறது.

ட்ரெய்லர்
நீங்க சின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்கிற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே என்று ரோபோ ஷங்கர் சிம்புவை பார்த்து கூறியது வசனம் இல்லை உண்மை. ப்பா எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி பன்ச் டயலாக் எல்லாம் பேசி என்று சிம்பு கூறுவதை கேட்டு ஆமாம் என்கிறார்கள் ரசிகர்கள். அவர் அந்த வசனத்தை சொல்வதே கியூட்டாக உள்ளது.

ட்ரீட்
பேட்ட படம் எப்படி ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்ததோ அதே போன்று வந்தா ராஜாவாதான் வருவேன் சிம்பு ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வம்பு இழுத்தாதான் சிம்புவுக்கு கெத்து என்பதை இயக்குனர் புரிந்து வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











