சுந்தர் சியை அலைகழிக்கும் நயன்தாரா?.. மூக்குத்தி அம்மன் 2 படம் நகர்வதில் சிக்கல்!

சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மாஸ் காட்டி வருபவர் சுந்தர் சி. இயக்குநராகத்தான் இவர் தமிழ் சினிமாவில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் தன்னுடைய மனைவி குஷ்பூவுடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறினார்.

கடந்த ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் இணைந்திருந்தனர். படம் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக சுந்தர் சிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இதனிடையே கடந்த பொங்கலையொட்டி வெளியான மதகஜராவும் சிறப்பான வசூலை குவித்துள்ளது.

sundar c nayanthara isari ganesh

இயக்குநர் சுந்தர் சி: இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமானவர் சுந்தர் சி. முறைமாமன் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கிய நிலையில், தன்னுடைய இயக்கத்தில் நடித்த நடிகை குஷ்பூவை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரு பெண்கள் உள்ள நிலையில், அடுத்தடுத்து நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார் சுந்தர் சி. கடந்த ஆண்டில் சுந்தர் சி நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணாவும் இணைந்திருந்த நிலையில் இந்தக் கூட்டணி அதிரடி சரவெடியாக அமைந்தது.

மதகஜராஜா படத்தின் சிக்கல்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து கலகலப்பு 3 மற்றும் மூக்குத்தி அம்மன் 2 படங்களை இயக்க கமிட்டானார் சுந்தர் சி. இதனிடையே, கடந்த பொங்கலையொட்டி இவரது இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி இணைந்து நடித்திருந்த மதகஜராஜா படம் வெளியானது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளியாகவிருந்த இந்தப் படம் பல்வேறு காரணங்களால் முடங்கியது. இந்நிலையில் கடந்த சில தினங்களில் இந்தப் படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் சந்தானம் காமெடி களத்தில் இறங்கியிருந்தது படத்திற்கு மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மீண்டும் இணையும் கூட்டணி?: இதனிடையே சுந்தர் சியுடன் மீண்டும் நடிகர் விஷால் இணையவுள்ளதாகவும் இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை பென்ஸ் மீடியா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இதுகுறித்து கேள்விப்பட்ட ஐசரி கணேஷ், மூக்குத்தி அம்மன் 2 படத்தை முதலில் முடித்துவிட்டு அடுத்ததாக விஷாலுடன் இணையும்படி சுந்தர் சியிடம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், இதுதொடர்பாக சுந்தர் சி கூறிய விஷயம் பெரியளவில் கோலிவுட்டில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சிக்கல்: மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்க நயன்தாரா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசாக இருந்தபோதிலும், படத்தில் சம்பளத்திற்கு பதிலாக சில சதவிகித லாபத்திற்காக நயன்தாரா ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. ஆனாலும் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல நயன்தாரா ஒத்துழைக்காத நிலை காணப்படுகிறது. அவர் படடத்திற்கான கால்ஷீட்டை கொடுக்காத நிலையில், படத்தின் சூட்டிங் தள்ளிப் போகிறதாம். இதனால் முதலில் நயன்தாராவிடம் கால்ஷீட் வாங்குமாறு சுந்தர் சி கூறியதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X