குழந்தைக்கு வாய்ப்பில்லை என்றார்கள்... வேறு திருமணம் செய்ய சொன்னார்.. குஷ்பூ பற்றி சுந்தர்.சி ஓபன்
சென்னை: தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர். குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின. மேலும் குஷ்பூ இட்லி என்பதும் தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனது. அந்த அளவுக்கு குஷ்பூ 80ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ. ஆனால் தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார். அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

ஒரே வருடத்தில் 10 படங்கள்: 90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், “மன்னன், ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.
அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.
மீண்டும் நடிப்பில் குஷ்பூ: சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த அவர் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் தற்போது ராமபானம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார் குஷ்பூ. ஆனால் அவர் நடித்த காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து தூக்கப்பட்டன.

சுந்தர்.சி பேட்டி: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி தனது மனைவி குஷ்பூ குறித்து பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், “குஷ்பூவிற்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது மருத்துவர் ஒருவர், உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ரொம்பவே மனம் உடைந்து போன குஷ்பூ; கண்ணீர் விட்டு அழுதார்.
வேறு திருமணம்: என்னிடம், நீங்கள் வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார். அதன் பிறகு நாங்கள் அந்த மனநிலைமையிலேயே வாழ்ந்தோம். ஆனால் கடவுள் வேறு ஒரு கணக்கை போட்டிருந்தார். எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. ஒரு பெண் தேவதை மட்டுமில்லாமல் மகள்கள் வடிவில் இரண்டு தேவதைகள் பிறந்தார்கள்” என்றார்.


Click it and Unblock the Notifications











