இந்த ஒரு காரணத்துக்காக விஜய் சாரை விமர்சிக்கமாட்டேன்.. சுந்தர். சி ஓபனாக சொன்ன விஷயம் என்ன தெரியுமா?
மதுரை: தமிழ்நாட்டில் எம்.ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ராமராஜன், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், குஷ்பு, கெளதமி என ஏகப்பட்ட பிரபலங்கள் அரசியலில் களம் கண்டுள்ளனர். புதிதாக விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி இந்த முறை மிகப்பெரிய அளவில் போட்டியிடுகிறார்.
விஜய்க்கு எதிராக சில சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக சார்பில் மதுரை மத்திய மத்திய தொகுதியில் களமிறங்கியுள்ள இயக்குநர் சுந்தர். சி விஜய்யையு அவரது கட்சியையும் விமர்சிக்கப் போவதில்லை என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை சுந்தர். சி இயக்கியிருந்தாலும், விஜய்யுடன் ஒரு படத்தில் கூட சுந்தர். சி பணியாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சார் மீது மரியாதை: தவெக தலைவராக மாறி 234 தொகுதிகளிலும் பல தடைகளை மீறி வேட்பாளர்களை வைத்து எப்படியாவது மாற்றத்தை கொண்டு வருவேன் என விஜய் தொடர்ந்து களத்தில் நின்று தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் 520 கோடி சொத்து தனது பெயரில் இருப்பதாகவும் அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொத்து மதிப்பை பார்த்த ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்தனர். இந்நிலையில், அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர். சி விஜய் சார் மீது தனக்கு மரியாதை இருக்கு என்றும் தன் மீது அவருக்கும் மரியாதை உள்ளது என்றும் கூறினார்.
அக்கா, தம்பி: எனது மனைவி குஷ்பு விஜய் சாரை தம்பியாகவே பாவித்து வருகிறார். அவரும் குஷ்புவை அக்கா என்று தான் அழைத்து வருகிறார். இப்படி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல நட்பு மற்றும் உறவு இருப்பதால், அவரை விமர்சிக்க வேண்டாம் என்கிற முடிவில் உள்ளேன் என சுந்தர். சி தனது கருத்துக்களை செம போல்டாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது வீடியோவை விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் ஷேர் செய்து வருகின்றனர். தாங்கள் செய்த நல்ல விஷயங்களை சொல்லி மக்களிடம் ஓட்டுக் கேட்க வேண்டும் என்றும் புதிதாக வருபவர்களை அரசியல் களத்தில் இருந்து காலி செய்யும் விதமாக ஆட்களை ஏவி பேசுவது நாகரீக அரசியல் கிடையாது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











