தலைவர் 173.. ஆட்டையை கலைத்த அந்த நபர்.. ரஜினிக்கு சுந்தர்.சி சொன்ன கதை.. வெளியான சீக்ரெட்

சென்னை: ரஜினி - கமல் படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதுதான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. அவர் வெளியேறியதற்கான காரணங்களை பலரும் யூகங்களாக சொல்லிக்கொண்டிருக்க; மறுபக்கம் யார் அந்தப் படத்தை இயக்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு இவ்விவகாரம் பற்றி தனது யூடியூப் சேனலில் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

ரஜினியை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கவிருந்த தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரஜினியின் தலைவர் 173 படத்திலிருந்து நான் விலகுகிறேன். கனத்த இதயத்துடனேயே இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது எனது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு.

அடுத்தக்கட்டத்துக்கு செல்ல உதவும்: சில நேரங்களில் நம் எதிர்பார்த்த அனைத்துமே வாழ்க்கையில் நடந்துவிடுவதில்லை. இந்தப் படம் பற்றி கடந்த மூன்று நாட்களாக பேசிக்கொண்டதெல்லாம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும். அதில் பல பாடங்களை அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவை அனைத்தும் எனது சினிமா கரியரில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நான் செல்வதற்கு உறுதுணையாகவே இருக்கும்.

Sundar C Quit Rajinikanth Kamal s Thalaivar 173 Journalist Cheyyaru Balu Reveals the Reason
Photo Credit:

இரண்டு பேருக்கு நன்றி; அனைவரிடமும் மன்னிப்பு: இருந்தாலும் தலைவர் 173 படத்திலிருந்து விலகுவது என்பது எனக்கு மிகவும் கடினமான முடிவுதான். அதை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த அவர்கள் இரண்டு பேருக்கும் அன்பும், நன்றியும். அதுமட்டுமின்றி அனைவரிடமும் நான் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். ரஜினி - கமல் இணையும் படத்தை இயக்கமாட்டோமா என்று திரைத்துறையில் அனைவருமே ஏங்கிக்கிடக வந்த வாய்ப்பை தூக்கி எறிந்த சுந்தர்.சியை அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

செய்யாறு பாலு வீடியோ: இந்த விவகாரத்தில் ஏகப்பட்ட யூகங்களை பலர் காரணங்களாக சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "ரஜினி - கமல் படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதற்கான காரணத்தை விசாரித்தோம். அப்போது நமக்கு சில விஷயங்கள் தெரியவந்தன. அதாவது கமலுடன் நிழலாக தொடரும் ஒரு நபர்தான் முதலில் இந்த ப்ராஜெக்ட்டை கொலாப்ஸ் செய்திருக்கிறார். அவர் சொல்வதைத்தான் கமல் கேட்டிருக்கிறார். இஷ்டத்துக்கு அவர் சொல்லியிருக்கிறார்.

க்ளைமேக்ஸில் பிரச்னை: அதேபோல் இன்னொன்றையும் சொல்கிறார்கள். அதாவது ரஜினிக்கு சுந்தர்.சி சொன்ன கதையில் க்ளைமேக்ஸ் அவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே அதை மாற்ற ரஜினி மாற்ற சொல்லியிருக்கிறார். ஆனால் சுந்தருக்கு அதில் விருப்பமில்லை எனவும் சொல்கிறார்கள். ஏற்கனவே கமலை வைத்து இயக்கிய அன்பே சிவம் படத்திலும் க்ளைமேக்ஸை கமல் சொன்னதற்காக விருப்பமே இல்லாமல்தான் எடுத்தேன் என்று சுந்தர்.சியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் கதைக்காகத்தான் பெரிய பஞ்சாயத்தே நடந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X